Tamil News
Home உலகச் செய்திகள் உக்ரைன் போரில் 5 மாதங்களில் 20,000+ ரஷ்ய ராணுவ வீரர்கள் உயிரிழப்பு: அமெரிக்கா தகவல்

உக்ரைன் போரில் 5 மாதங்களில் 20,000+ ரஷ்ய ராணுவ வீரர்கள் உயிரிழப்பு: அமெரிக்கா தகவல்

உக்ரைன் போரில் கடந்த ஐந்து மாதங்களில் மட்டும் 20,000-க்கும் மேற்பட்ட ரஷ்ய இராணுவ வீரர்கள் கொல்லப்பட்டுள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.

இது குறித்து அமெரிக்காவின் தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் ஜான் கெர்பி கூறும்போது, “உக்ரைன் போரில் ரஷ்யாவுக்கு இராணுவம் சார்ந்து பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளது.

கடந்த 5 மாதத்தில் மட்டும் உக்ரைன் போரில் 20,000-க்கும் அதிகமான ரஷ்ய இராணுவ வீரர்கள் கொல்லப்பட்டுள்ளனர். 80,000 பேர் காயமடைந்துள்ளனர். உயிரிழந்துள்ள இராணுவ வீரர்களில் பெரும்பாலானவர்கள் பெஞ்னர் என்ற தனியார் இராணுவ கம்பெனியைச் சேர்ந்தவர்கள். இந்தப் பெரும் உயிரிழப்பு பஹ்மத் என்ற சிறு நகரை ரஷ்யா கைப்பற்றும்போதுதான் நடந்துள்ளது” என்று தெரிவித்துள்ளார்.

Exit mobile version