கோவிட்19: ஒரே நாளில் 200பேர் பலி- 8000 கடந்த உயிரிழப்புக்கள்

ஒரே நாளில் 200பேர் பலி

ஒரே நாளில் 200பேர் பலி: இலங்கையில்  ஒரே நாளில் 200ஐத் தாண்டிய கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளன. அதேவேளை, நாட்டில் கொரோனாத் தொற்றால் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 8 ஆயிரத்தைக் கடந்துள்ளது.

நேற்றுமுன்தினம் 209 பேர் கொரோனாத் தொற்றால் மரணித்துள்ளனர் என்று அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.

இதையடுத்து கொரோனா தொற்றால் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 8,157 ஆக அதிகரித்துள்ளது.

நேற்று முன்தினம் மரணித்த 209 பேரில் 108 ஆண்களும், 101 பெண்களும் உள்ளடங்குகின்றனர்.

தேய்நிலையில் தேயிலைத் தொழிற்றுறை – துரைசாமி நடராஜா

இந்நிலையில், கொரோனாவைக் கட்டுப்படுத்தும் நோக்கில் நாடு முழுமையாக முடக்கப்பட்டுள்ளது. ஆனால் நாட்டை முடக்குவதால் எதனையும் சாதிக்கவில்லை என தெரிவித்துள்ள சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல, திங்கட்கிழமைக்கு பின்னர் நாடு முடக்கப்படும் என கருதவில்லை  என்றார்.

அதே நேரம் இலங்கையில் திங்கட்கிழமை நாடாளாவிய முடக்கல் நிலைமையை நீக்குவதாலும் பின்னர் கட்டுப்பாடுகளை தளர்த்துவதாலும் கொரோனா உயிரிழப்புகள் 16,700 ஆக அதிகரிக்கும் ஆபத்துள்ளதாக உலக சுகாதார ஸ்தாபனத்தின் ஆதரவுடன் மேற்கொள்ளப்பட்ட ஆய்வொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ilakku-weekly-epaper-144-august-22-2021