பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள இருபதாம் திருத்தச் சட்டத்தின் வரைபை சவாலுக்கு உட்படுத்தி மேலும் ஆறு மனுக்கள் உயர் நீதிமன்றில் நேற்று தாக்கல் செய்யப்பட்டன.
இந்த மனுவை தென் மாகாணத்தின் முன்னாள் ஆளுநர் கீர்த்தி தென்னகோன் தாக்கல் செய்துள்ளார். நேற்றைய தினமும் 6 மனுக்கள் உயர் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டன.
நேற்றுமுன்தினமும் 6 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன. இதனால், 20ஆவது திருத்தத்திற்கு எதிராக நேற்று மாலை வரை 12 மனுக்கள் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.