20வது திருத்த சட்டம் பௌத்தத்திற்கு அச்சுறுத்தலா?

229 Views

20வது திருத்த சட்டம் பௌத்தத்திற்கு அச்சுறுத்தலாக காணப்படுகின்றது என ஐக்கியதேசிய கட்சியின் பிரதிதலைவர் ருவான் விஜயவர்த்தன தெரிவித்துள்ளார்.

இது குறித்து கருத்து தெரிவித்த அவர்,

போரில் இழந்தவர்களை நினைவுகூர அனுராதபுரத்தில் நினைவுத்தூபி - Eela Malar

மக்களின் இறைமை என்பது நாடாளுமன்றம் நிறைவேற்று அதிகாரம் நீதித்துறை ஆகியவற்றிலேயே தங்கியுள்ளது. அரசாங்கத்தின் முக்கியமான நான்கு பிரிவுகளில் நிறைவேற்று அதிகாரம் மாத்திரம் வலுப்படுத்தும்போது மக்களின் இறைமை செல்லாத பொருளாதா மதிப்பிழந்து விடுகின்றது.

உத்தேச 20வது திருத்தத்தின் மூலம் நாடாளுமன்றம் நீதித்துறை ஊடகம் ஆகியன முற்றாக புறக்கணிக்கப்படுகின்றன. மக்களின் இறைமையை பாதுகாப்பதே அரசமைப்பின் நோக்கம். மக்களின் இறைமை மீறப்படும்போது பௌத்தம் அச்சுறுத்தலுக்கு உள்ளாகின்றது.  

மக்களின் இறைமைக்கு பாதிப்பை ஏற்படுத்தும் எந்த நடவடிக்கையையும் ஐக்கியதேசிய கட்சி ஏற்றுக்கொள்ளாது. எங்கள் இறைமையை பறிக்க நினைத்தவேளை சோழர்களுக்கும் பிரிட்டிஸ் ஆட்சியாளருக்கும் எதிராக நாங்கள் போராடினோம்.  மேலும் கடந்த காலத்தில் பௌத்தத்தை பாதுகாப்பதற்காக நாங்கள் போராடினோம். 20வது திருத்தம் நிறைவேற்றப்பட்டால் அது நீதித்துறையின் சுயாதீனதன்மைக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என தெரிவித்துள்ளார்.

Leave a Reply