Tamil News
Home செய்திகள் 19 ஆவது திருத்தம் நீக்கப்பட்டால் சுயாதீனக் குழுக்களுக்கு என்ன நடக்கும்? லக்ஷ்மன் கிரியெல்ல

19 ஆவது திருத்தம் நீக்கப்பட்டால் சுயாதீனக் குழுக்களுக்கு என்ன நடக்கும்? லக்ஷ்மன் கிரியெல்ல

அரசியலமைப்பின் 19 ஆவது திருத்தச்சட்டம் நீக்கப்படும் என்று ஜனாதிபதி அறிவித்துள்ளார். அப்படியானால் சுயாதீன ஆணைக்குழுக்களுக்கு என்ன நடக்கும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல கேள்வி எழுப்பினார்.

பாராளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற ஜனாதிபதியின் கொள்கை விளக்க உரை தொடர்பான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்வாறு வினாதொடுத்தார்.

“இந்நாட்டில் கண்டிய சட்டம், தேசவழமைச்சட்டம் என சில சட்டங்கள் உள்ளன. ஆனால் ஒரே நாடு ஒரு சட்டம் என ஜனாதிபதி கூறுகின்றார். இது எப்படி சாத்தியம்? 19 இன் பிரகாரம் சுயாதீன ஆணைக்குழுக்கள் அமைக்கப்பட்டு ஜனநாயகம் பாதுகாக்கப்பட்டது. அவற்றுக்கு என்ன நடக்கும் என்பதையும் அரசு அறிவிக்கவேண்டும்” எனவும் கிரியெல்ல வலியுறுத்தினார்.

Exit mobile version