18 மணி நேர வேலை -கொரியாவில் இலங்கைத் தொழிலாளி உயிரிழப்பு

maxresdefault 2 18 மணி நேர வேலை -கொரியாவில் இலங்கைத் தொழிலாளி உயிரிழப்புதென் கொரியாவின் Gyeonggi மாகாணத்தின் Hwaseong என்ற இடத்தில் உள்ள பிளாஸ்டிக் உற்பத்தி தொழிற் சாலையில் வேலை செய்த இலங்கை இளைஞன், தொழிற் சாலையில் ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்ததாக  தகவல் வெளியாகியுள்ளது.

Hwaseong Seobu  காவல் நிலையத்தின் அறிக்கைக்கு அமைய, இலங்கையைச் சேர்ந்த 33 வயதான தொழிலாளி ஜூலை 25 ஆம் திகதி அதிகாலை 3:30 மணியளவில் Hwaseong என்ற இடத்தில் உள்ள பிளாஸ்டிக் உற்பத்தி தொழிற் சாலையில் இறந்துள்ளார்.

அவர் இயந்திரத்தின் தட்டை மாற்ற முயற்சிக்கும் போது அதில் சிக்கி உயிரிழந்து ள்ளதாகத் தெரிவிக்கப் பட்டுள்ளது.

மேலும்  உயிரிழந்தவர் உட்பட வெளிநாட்டு தொழிலாளர்கள் மூவர் தொடர்ச்சியாக 18 மணி நேரத்திற்கும் அதிகமாக பணிபுரிந்து வந்துள்ளதாக  விசாரணையில் தெரிய வந்துள்ளதாகவும் தெரிவிக்கப் படுகின்றது.

இதையடுத்து தொழிலாளர் சட்டத்தில் ஏதேனும் மீறல்கள் ஏற்பட்டுள்ளதா என  அந்நாட்டுக் காவல் துறையினர் விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும் தெரிவிக்கப் பட்டுள்ளது.

ilakku-weekly-epaper-140-july-25-2021