Home செய்திகள் செஞ்சோலையில் படுகொலை – முல்லைத்தீவு மகாவித்தியாலயத்தில் அஞ்சலி

செஞ்சோலையில் படுகொலை – முல்லைத்தீவு மகாவித்தியாலயத்தில் அஞ்சலி

received 352703209651580 செஞ்சோலையில் படுகொலை - முல்லைத்தீவு மகாவித்தியாலயத்தில் அஞ்சலி

முல்லைத்தீவு மாவட்டத்தின் வள்ளிபுனம் பகுதியில் அமைந்திருந்திருந்த செஞ்சோலை சிறுவர் இல்ல வளாகத்தை இலக்கு வைத்து சிறீலங்கா விமானப்படை கிபிர் விமானங்கள் நடாத்திய மிலேச்சத்தனமான தாக்குதலில்  மாணவிகள் 54 பேரும் சிறுவர் இல்ல பணியாளர்கள் 7 பேரும் உள்ளடங்கலாக 61 பேர் படுகொலை செய்யப்பட்டதன் 15 ம் ஆண்டு நினைவு நாள் இன்று நினைவு கூரப்பட்டது.

வருடந்தோறும் குறித்த படுகொலை நினைவேந்தல் நிகழ்வு வள்ளிபுனம் பகுதியில் விமான தாக்குதல் நடாத்தப்பட்ட சிறுவர் இல்ல வளாகத்தில் அனுஸ்ரிக்கப்படுவதோடு தமிழர் தாயகத்தில் பல்வேறு இடங்களிலும் நினைவேந்தல் நிகழ்வு இடம்பெறுவது வழமை. இருப்பினும் இம்முறை குறித்த நினைவேந்தல் நிகழ்வுகளை  அனுஸ்ரிக்க காவல் துறையினர், இராணுவத்தினர் மற்றும்  புலனாய்வாளர்கள் தடை விதித்துள்ளனர்.

இந்நிலையில்,  முல்லைத்தீவு மகா வித்தியாலய முன்றலுக்கு வருகை தந்த தமிழரசுக் கட்சியின் முக்கியஸ்தர்களில் ஒருவரான பீற்றர் இளஞ்செழியன் உயிரிழந்த மாணவர்கள் மற்றும் பணியாளர்கள் நினைவாக சுடர் ஏற்றி மலர் தூவி அகவணக்கம் செலுத்தி அஞ்சலி செலுத்தினார்.

 

அதே போல், ரவிகரனின் மக்கள் தொடர்பகத்தில் உணர்வெழுச்சியுடன்  செஞ்சோலைப் படுகொலையின் 15ஆம் ஆண்டு நினைவேந்தல் நினைவு கூரப்பட்டது.

புதுக்குடியிருப்பு பிரதேச சபை உறுப்பினர் சிவபாதம் குகனேசன் அவர்கள் தனது இல்லத்தில் உயிரிழந்த உறவுகள் நினைவாக சுடரேற்றி அகவணக்கம் செலுத்தி  மலர் தூவி அஞ்சலி செலுத்தியுள்ளார்.

அத்துடன் யாழ்.மாநகர முதல்வர் சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணன் தலைமையில் செஞ்சோலை படுகொலை நிகழ்வு நடைபெற்றது.

Exit mobile version