மலேசிய சிறைகளில் 150 வெளிநாட்டவர்கள் மரணம்

மலேசியாவில் குடியேற்றக்காரர்களை தடுத்து வைக்கும் சிறைகளில் கடந்த வருடம் 150 இற்கு மேற்பட்ட வெளிநாட்டவர்கள் இறந்துள்ளதாகவும், இது தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும் மனித உரிமை அமைப்புக்கள் கோரிக்கை விடுத்துள்ளன.

இறந்தவர்களில் 7 சிறுவர்கள் மற்றும் 25 பெண்களும் அடங்கியுள்ளனர். எனினும் இந்த தகவல்களை நாடாளுமன்றத்தில் உறுதிப்படுத்திய மலேசியாவின் உள்த்துறை அமைச்சர் சைபுடின் நசூசன் இஸ்மாயில் அதற்கான காரணத்தை கூறவில்லை.

17,703 வெளிநாட்டவர்கள் தங்குமிடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளர். அவர்களில் குழந்தைகள் இறப்பது என்பது அவர்களை மலேசிய அரசு கவனிக்கவில்லை என்பதை தான் காட்டுவதாக அனைத்துலக மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.

இந்த மரணங்கள் தொடர்பில் மலேசிய அரசு உடனடியான விசாரணகைளை மேற்கொள்ள வேண்டும் என மன்னிப்புச் சபை மலேசிய அரசுக்கு எழுதிய கடிதத்தில் தெரிவித்துள்ளது.

விசாரணகைளின் முடிவுகள் வெளிப்படையாக அறிவிக்கப்பட வேண்டும். மரணித்தவர்களின் குடும்பங்களுக்கு நீதி கிடைக்க வேண்டும். அதனை மலேசிய அரசு உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என அது மேலும் தெரிவித்துள்ளது.