14 நாட்களையும் கடந்தும் திருகோணமலையில் பல கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் முடக்கம்  

கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கையில்  கிண்ணியா மற்றும் குறிஞ்சாக்கேணி சுகாதாரப் பிரிவுகள் நான்கு மற்றும் இறுதி இடங்களில் காணப்படுகின்றது.

அதனடிப்படையில் திருகோணமலை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 683 பேர் கொரோனா தெற்றுக்குள்ளாவர்கள் காணப்படுகின்றனர் இதுவே மாவட்டத்தில் அதிக தொற்றுள்ள சுகாதார வைத்திய அதிகாரி பிரிவாகும். இருந்தாலும் தற்போது தனிமைப் படுத்தப்பட்ட கிராமங்கள் அங்கு இல்லை.

அதேபோன்று இரண்டாவது அதி கூடிய தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்ட உப்புவெளி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 468 பேர் தொற்றுக்குள்ளாகி 1 கிராம உத்தியோகத்தர் பிரிவு முழுமையாகவும், மற்றுமொரு கிராம உத்தியோகத்தர் பிரிவு பகுதி அளவிலும் முடக்கப்பட்டுள்ளது. அடுத்தாக 3 வது இடத்தில் மூதூர் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 260 நபர்கள் அடையாளம் காணப்பட்ட போதும் அக் கிராமம் முடக்கப்படவில்லை.

4வது இடத்தில் 259 தொற்றாளர்கள் காணப்படும் கிண்ணியா சுகாதார வைத்தில அதிகாரி பிரிவில் 10 கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் இன்றுவரை முடக்கப்பட்டுள்ளமை தொடர்பில் மக்கள் அதிர்ப்தியை வெளிப்படுத்தி வருகின்றனர்.

5வது இடத்தில் உள்ள கந்தளாய் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 170 நபர்கள் தொற்றுக்குள்ளாகி உள்ளனர் ஆனால் அங்கு எந்த தனிமைப்படுத்தல் அறிவிப்பும் விடுக்கப்படவில்லை. குச்சவெளி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 163 நபர்கள் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டு 6வது இடத்தில் உள்ளது.

IMG 1622484249791 14 நாட்களையும் கடந்தும் திருகோணமலையில் பல கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் முடக்கம்  

மாவட்டத்தில் தொற்றாளர்களின் எண்ணிக்கை குறைவாக உள்ள குறிஞ்சாக்கேணி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 160 தொற்றாளர்களே அடையாளம் காணப்பட்டுள்ளனர் இருந்தாலும் ஆபத்து குறைவாக உள்ள இப்பகுதியில் 2 கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் முடக்கத்துக்குள்ளாகி உள்ளமை தொடர்பில் மக்கள் அதிர்ப்தியை வெளியிட்டுள்ளனர்.

நாட்டில் முடக்கத்துக்குள்ளான பகுதிகள் யாவும் 14 நாட்கள் அல்லது 7 நாட்களின் பின்னர் விடுவிக்கப்பட்டாலும் கிண்ணியா மற்றும் குறிஞ்சாக்கேனி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகள் 14 நாட்களையும் கடந்து முடக்கப்பட்டிருப்பது  குறித்து மக்கள் மத்தியில் குழப்பங்கள் நிலவி வருகின்றது.

இது தொடர்பில குறித்த பிரதேச சுகாதார வைத்திய அதிகாரிகள் அசமந்தப்போக்குடன் செயல்படுவதாக மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.