ஒற்றையாட்சியை தமிழர்கள் ஏற்கவைப்பதற்கான சதியே ‘13’; கஜேந்திரன் எம். பி. சாடல்

தமிழர்கள் ஏற்க வைப்பதற்கான சதி

ஒற்றையாட்சியை தமிழர்கள் ஏற்க வைப்பதற்கான சதி: “இலங்கையை மகிழ்விப்பதற்கும், தமிழ் மக்களை ஒற்றையாட்சிக்குள் முடக்குவதற்கும் தமிழ் தலைவர்களை வைத்து இந்தியா எடுக்கும் முயற்சியே 13 ஆவது திருத்தச் சட்டத்தை நடை முறைப்படுத்தக் கோரும் திட்டம்” என்று சாடியிருக்கிறார் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் செ. கஜேந்திரன் எம். பி. அத்துடன், “விடுதலைப் போராட்ட காலத்தை விட நாம் தற்போது பலமாக இருக்கிறோம்” என்றும் அவர் குறிப்பிட் டுள்ளார்.

மாமனிதர் குமார் பொன்னம்பலத்தின் 22ஆவது நினைவேந்தல் பொதுக் கூட் டம் நேற்று நாவலர் கலாசார மண்டபத் தில் இடம்பெற்றது. இதில் பங்கேற்று பேசியபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார். மேலும் அவர் தனது உரையில் தெரிவித்தவை வருமாறு,

”இந்த மாத இறுதியில் கோட்டாபய அரசாங்கம் ஓர் அரசமைப்பு வரைவை சமர்ப்பிக்கவுள்ளனர். அந்த அரசமைப்பு வருகின்றபோது நீங்கள் 13 ஐ தொடக்கப் புள்ளியாக ஏற்றால் – மக்கள் பிரதிநிதிகள் பாராளுமன்றில் ஆதரித்து வாக்களித்தால் அத்தோடு எம் மக்களின் கதை முடிந்து விடும்.

தமிழர்கள் ஒற்றையாட்சி அரசமைப்பை ஏற்றுக்கொள்கின்றீர்கள் என்று அர்த்தம். நாட்டின் அரசமைப்பை அனைத்து சமூ கங்களும் ஏற்றுக் கொள்ளக்கூடியவாறு மாற்ற வேண்டும் என்று வலியுறுத்தும் சர்வதேச நெருக்கடி இலங்கை அரசாங் கத்துக்கு அதிகரித்துள்ளது. ஐ. நா. அமைப்பும் பல்வேறு நாடுகளின் இராஜதந்திரி களும் இதனை தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.

இந்த நேரத்தில் அவர்கள் புதிய அரச மைப்பை கொண்டு வரும்போது நாங்கள் இந்த தீவில் பாதுகாப்பாக வாழ்வதற்கான அரசமைப்பு குறித்து சிந்திக்க வேண்டுமா? அல்லது இந்தியாவின் தேவைக்காக இந் தியாவின் நலன்களை பேணுவதற்காக ஜே. ஆர். ஜெயவர்த்தனவும் இணைந்து தன்னிச்சையாக கொண்டு வந்த 13ஆவது திருத்த சட்டத்தை தொடக்கப் புள்ளியாக ஏற்று ஒற்றையாட்சிக்குள் விழ போகிறீர் களா?

இலங்கை – இந்திய ஒப்பந்தம் என்பது தமிழ் மக்களின் நலன்களுக்காக செய்யப் பட்டதல்ல. அது இந்தியாவின் தேசிய பாதுகாப்பு நலன்களை பிராந்திய நலன் களை உறுதிப்படுத்துவதற்காக – இலங் கையை தன்னுடைய கட்டுப்பாட்டுக்குள் நாணயம் குத்தி வைப்பதற்காக செய்யப் பட்டதுதான் அந்த ஒப்பந்தம். நாங்கள் இந்தியாவின் நலன்களுக்கு மாறானவர்கள் அல்ல. அதன் தேசிய பாதுகாப்புக்கு எதிரானவர்கள் அல்ல.

உங்கள் நலன்களுக்காக செய்து கொள் ளப்பட்ட இலங்கை – இந்திய ஒப்பந்தம் அது உங்கள் நலன்சார்ந்ததாகவே இருக் கட்டும். எங்கள் இருப்புக்காக – எங்கள் தீர்வுக்காக தேச அங்கீகாரத்தை வலி யுறுத்தும் நாங்கள் சொல்கின்ற – 1951 ஆம் ஆண்டு தமிழ் அரசுக் கட்சியின் திரு கோணமலை மாநாட்டில் இருந்து வலி யுறுத்தப்பட்ட தமிழ்த் தேசம், அதன் இறைமை, சுயநிர்ணய உரிமை அங்கீகரிக் கப்பட்ட அடிப்படையிலான சமஷ்டி அரசமைப்பை உருவாக்குவதற்கான அழுத்தத்தை இலங்கைமீது இந்தியா பிரயோகிக்க வேண்டும்” என்றார்.

Tamil News