Tamil News
Home உலகச் செய்திகள் 13 ஆண்டுகளுக்கு பின் ‘மலபார் பயிற்சிக்காக கூட்டு சேர்ந்த நாடுகள்!

13 ஆண்டுகளுக்கு பின் ‘மலபார் பயிற்சிக்காக கூட்டு சேர்ந்த நாடுகள்!

க்வாட் நாடுகளின் கூட்டு இராணுவ பயிற்சியில் இந்தியா, அமெரிக்கா,ஜப்பான் மற்றும் ஆஸ்திரேலியா இணையவுள்ளன.

சுமார் 13 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெறவுள்ள இந்த பயிற்சி, அடுத்த மாதத்தில், அதாவது நவம்பரில், வங்காள விரிகுடா மற்றும் அரேபிய கடலில்  நடைபெறவுள்ளது. இதற்கு அதிகாரப்பூர்வமாக ‘மலபார் பயிற்சி’ என்று பெயரிடப்பட்டுள்ளது.

இதில் 2007 ஆம் ஆண்டில் நடந்த இந்தக் கூட்டு இராணுவ பயிற்சியிலிருந்து தன்னை விலக்கிக் கொண்டது ஆஸ்திரேலியா. அப்போது இந்தியாவிற்கும் ஆஸ்திரேலியாவிற்கும் இடையிலான உறவுகள் அவ்வளவு சிறப்பாக இல்லை, அதனால்தான் ஆஸ்திரேலியா  இராணுவப் பயிற்சியிலிருந்து தன்னை விலக்கிக் கொண்டது. ஆனால் இப்போது அந்நாடு மீண்டும் இராணுவ பயிற்சியில் இணைவது, குவாட் நாடுகளின் அமைப்பு மேலும் வலுவடையும் என்று நம்பப்படுகிறது.

இது குறித்து ஆஸ்திரேலிய வெளியுறவு அமைச்சர் மேரிஸ் பாயன் ஒரு அறிக்கையில், இந்த ஆண்டு ஜூன் மாதத்தில் இந்திய பிரதமருக்கும் ஆஸ்திரேலிய பிரதமருக்கும் இடையே, நடந்த பேச்சுவார்த்தையின்போது இந்த ராணுவ பயிற்சி குறித்து விவாதிக்கப்பட்டது. இரு தலைவர்களும் ஒருவருக்கொருவர் ஒரு ‘மெய்நிகர் சந்திப்பு’ நடத்தினர். கூட்டத்தில் பல பிரச்சனைகள் குறித்து விவாதிக்கப்பட்டது. ஒருங்கிணைந்த மலபார் பயிற்சி, அந்த உரையாடலின் விளைவாகும் என்று குறிப்பிட்டுள்ளார்.

“வெள்ளை இன மேலாதிக்க” உணர்வில் அமெரிக்காவை விட ஆஸ்திரேலியா தீவரப் போக்கு கொண்டது. ஆனால் இப்போது ஆஸ்திரேலியா மீண்டும் குவாட்டில் இணைந்துள்ளது என்பதே ஒரு பெரிய விஷயம். சீனாவின் போக்கால் ஏற்பட்ட கவலையே இதற்குக் காரணமாக இருக்க முடியும்” என்று மூத்த பத்திரிகையாளரும் வெளியுறவு விவகார நிபுணருமான மனோஜ் ஜோஷி தெரிவித்துள்ளார்.

இந்நிலையில்,”இந்த நான்கு நாடுகளும் ஒன்றாக இருந்து ஆஸ்திரேலியா மீண்டும் பிரிந்து செல்லாமல் இருந்தால், இந்த அமைப்பு, நிச்சயமாக பிராந்தியத்தில் ஒரு முக்கிய சக்தியாக உருவெடுக்கும். குவாட்-ன் செயல்பாடுகள் தற்போது இராணுவப் பயிற்சிகளுக்கு மட்டுமே என்றாலும், குறைந்தபட்சம் அனைத்து நாடுகளும் தங்கள் நிலைப்பாட்டை தெளிவுபடுத்தி ஒரு செய்தியை அளிக்க இதுவே போதுமானது.” என்று கேந்திர விவகாரங்களின் நிபுணர் சுஷாந்த் சரீன் தெரிவித்துள்ளார்.

மேலும் இந்த நான்கு நாடுகளும் சீனாவிற்கு எதிரான போக்கைக் கடைபிடிப்பது யாருக்கும் நன்மை பயக்காது என்று கூறுகின்றார்.

இந்நிலையில், கருத்து தெரிவித்த சீனாவின் சிச்சுவான் பல்கலைக்கழகத்தின் சர்வதேச ஆய்வுகள் குறித்த கல்வி நிறுவனத்தின் இணை டீன், பேராசிரியர் ஹுவாங் யூன்சாங்,

“கொரோனா தொற்றுநோய்க்கு எதிரான தங்களது போராட்டத்தில் ஏற்பட்ட தோல்வியை மறைக்கவே இந்த குவாட் நாடுகள், சீனாவிற்கு எதிரான போக்கைக் கடைபிடிப்பது என்பது துரதிருஷ்டவசமானது” என்றார்.

Exit mobile version