427 Views
11 நாடாளுமன்ற உறுப்பினர்கள் அரசாங்கத்திலிருந்து விலகப்போவதாக எச்சரிக்கை விடுத்துள்ளனர் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
இலங்கை மக்களின் நாளாந்த வாழ்க்கையை பாதித்துள்ள பொருளாதார எரிபொருள் உணவு நெருக்கடிக்கு அப்பால் கடந்த வாரம் இரண்டு அமைச்சர்கள் பதவி விலக்கப்பட்டதை தொடர்ந்து அரசாங்கத்தின் 11 நாடாளுமன்ற உறுப்பினர்கள் பதவி விலகப்போவதாக தெரிவித்துள்ளதால் புதிய அரசியல் நெருக்கடி உருவாகியுள்ளது.
விமல்வீரவன்ச உதயகம்மன்பில பதவி நீக்கப்பட்டமை அரசாங்கத்தின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மத்தியில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, அமைச்சர் வாசுதேவ நாணயக்கார உட்பட 11 நாடாளுமன்ற உறுப்பினர்கள் அரசாங்கத்திலிருந்து விலகப்போவதாக எச்சரித்துள்ளனர்.