11 இளைஞர்கள் கடத்திக் கொலை ; வசந்த கரன்னகொட உட்பட 13 பேருக்கு அழைப்பாணை!

சிறிலங்காவின் முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கரன்னகொட மற்றும் சந்தேகநபர்கள் 13 பேரையும் நீதிமன்றில் ஆஜராகுமாறு அழைப்பாணை விடுக்கப்பட்
டுள்ளது.

அவர்களை எதிர்வரும் பெப்ரவரி மாதம் 24 ஆம் திகதி நிரந்தர நீதாய மேல் நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு அழைப்பாணை அனுப்பப்பட்டுள்ளது.

2008 மற்றும் 2009 காலப் பகுதியில் கொழும்பில் வைத்து 11 இளைஞர்களைக் கடத்திச் சென்று தடுத்து வைத்து அவர்களைக் கொலை செய்தனர் என முன்னாள் கடற்படைத் தளபதி மற்றும் 13 பேர் மீது சட்டமா அதிபர் திணைக்களம் குற்றம் சாட்டியிருந்தது.

இந்நிலையில் கடந்த வருட இறுதியில் குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் 124 ஆவது பிரிவின்படி குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினால் பெறப்பட்ட நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் வசந்த கரன்னகொடவிடம் விசாரணைகள் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.