Tamil News
Home செய்திகள் 11 இளைஞர்கள் கடத்தல்: நேவி சம்பந்துக்கு நிபந்தனைகளுடன் பிணை

11 இளைஞர்கள் கடத்தல்: நேவி சம்பந்துக்கு நிபந்தனைகளுடன் பிணை

கொழும்பில் 2008 – 09 காலப்பகுதியில் 11 இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட வழக்கில் முக்கிய சந்தேக நபராகக் குறிப்பிடப்படும், இலங்கைக் கடற்படையின் முன்னாள் புலனாய்வு அதிகாரியான நேவி சம்பத் என அழைக்கப்படும் லெப்டினண்ட் கொமாண்டர் சந்தன பிரசாத் யஹற்றியாராச்சி பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

சந்தேக நபருக்கு மேல் நீதிமன்றம் வழங்கியுள்ள பிணை அனுமதியின் அடிப்படையில், கடுமையான நிபந்தனைகளுடன் நேவி சம்பத்தை பிணையில் விடுவிக்க கொழும்பு கோட்டை நீதிவான் ரங்க திசநாயக்க நேற்று முன்தினம் உத்தரவிட்டார்.

வழக்கு விசாரணை முடியும் வரை, சந்தேக நபர் வெளிநாடு செல்வதற்குத் தடை விதித்த நீதிவான் கடவுச்சீட்டை நீதிமன்றத்தில் ஒப்படைக்குமாறும் பணித்தார். இந்த வழக்கை விசாரிக்க நீதிபதிகளின் குழுவொன்றை நியமிக்குமாறு தலைமை நீதியரசரிடம் சட்டமா அதிபர் கோரியிருந்தார். எனினும், இன்னமும் தலைமை நீதியரசர், அந்தக் குழுவைநியமிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version