Tamil News
Home செய்திகள் உத்தேச ஒலிபரப்பு ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழு சட்ட மூலம்: தர்மலிங்கம் சித்தார்த்தன் கருத்து

உத்தேச ஒலிபரப்பு ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழு சட்ட மூலம்: தர்மலிங்கம் சித்தார்த்தன் கருத்து

உத்தேச ஒலிபரப்பு ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழு  சட்டமூலத்தின் மூலம் என்ன செய்வதற்கு அரசாங்கம் முயற்சிக்கின்றதென்றால், ஒலிபரப்பு அதாவது, தொலைக்காட்சிளுடைய செய்திகளை வெளியில் விடக் கூடியதையெல்லாம் கட்டுப்படுத்துவதற்காகவும் தங்களுக்குச் சாதகமாகச் செய்திகளைத் தவிர வேறு செய்திகளை ஒலிபரப்ப விடாது கட்டுக்கடுத்துவதற்கும், அதற்கு மீறி செய்யக்கூடிய விடயங்களை அவர்களுக்குத் தண்டிப்பதற்குமான ஒரு சட்டமூலமாகவே நாம் இதைப் பார்க்கலாம் என  நாடாளுமன்ற உறுப்பினரும் புளொட் அமைப்பின் தலைவருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்துள்ளார்.

நேற்றைய தினம் (05.06.2023) யாழில் இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அவர் தெரிவித்துள்ளதாவது, ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழு சட்ட மூலம் ஒன்றை உருவாக்குவதற்கான முயற்சியிலே இப்போது அரசாங்கம் ஈடுபட்டுள்ளதாகவும் அறியமுடிகின்றது.

அது மட்டுமல்ல, இதனை நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்சவும் உறுதிப்படுத்தியுள்ளார்.

இந்த சட்டமூலத்தின் பெயரே மிகவும் தெளிவாக ஒரு விடயத்தைக் காட்டுகின்றது. ஒழுங்குபடுத்தும் என்றால் கட்டுப்பாடு விதிக்கும். ஒலிபரப்புக்கான அதாவது, தொலைக்காட்சிகளே இதில் அதிகம் பாதிக்கப்படுகின்றது.

அவர்கள் ஒலிபரப்புகின்ற விடயங்களைக் கட்டுப்படுத்துவதற்கான ஒரு சட்டமூலம், அதற்காக ஐந்து பேர்கொண்ட ஆணைக்குழு. இதிலே இருவர் அமைச்சுகளுடைய செயலாளராக இருப்பார்கள். முக்கியமாகத் தலைவர் ஜனாதிபதியுடைய தெரிவாக இருப்பார்கள் என்றார்.

Exit mobile version