Tamil News
Home செய்திகள் கொழும்பு துறைமுகத்தில் பாகிஸ்தான் கடற்படைக் கப்பல்

கொழும்பு துறைமுகத்தில் பாகிஸ்தான் கடற்படைக் கப்பல்

பாகிஸ்தான் கடற்படைக் கப்பலான (பிஎன்எஸ்) ‘ஷாஜஹான்’ உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.

வருகை தந்துள்ள கப்பலை இலங்கை கடற்படையினர் கடற்படை மரபுகளுக்கு அமைவாக வரவேற்றனர்.

PNS ‘ஷாஜஹான்’ என்பது 134.1 மீ நீளமுள்ள போர்க்கப்பல் ஆகும், இது 169 பேர் கொண்ட குழுவினரால் நிர்வகிக்கப்படுகிறது.

அக்கப்பலின் கெப்டனாக அட்னான் லகாரி டி உள்ளார்.

கப்பலின் கட்டளை அதிகாரி மேற்கு கடற்படை கட்டளைத் தலைமையகத்தில் மேற்கு கடற்படைத் தளபதி ரியர் அட்மிரல் சுரேஷ் டி சில்வாவை சந்தித்துள்ளார்.

கப்பல் தங்கியிருக்கும் போது, ​​​​இரண்டு கடற்படையினருக்கு இடையிலான ஒத்துழைப்பையும் நல்லுறவையும் மேம்படுத்தும் நோக்கில், இலங்கை கடற்படையால் ஏற்பாடு செய்யப்பட்ட பல நிகழ்ச்சிகளில் பணியாளர்கள் பங்கேற்பார்கள் என கடற்படை அறிக்கையில் தெரிவித்துள்ளது.

அவர்கள் நாட்டில் உள்ள சில சுற்றுலாத் தலங்களுக்கும் செல்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. தனது உத்தியோகபூர்வ விஜயத்தை முடித்துக் கொண்டு, ‘ஷாஜஹான்’ நாளை நாட்டில் புறப்பட்டு செல்லவுள்ளது.

Exit mobile version