105 பேர் கொண்ட மாலைதீவு அரச குழு சிறீலங்கா வந்தது

சிறீலங்கா, மாலைதீவு மற்றும் இந்தியா ஆகிய நாடுகளுக்கு இடையிலான கூட்டு முன்னனியை உருவாக்கும் இந்தியாவின் திட்டத்திற்கு அமைவாக மாலைதீவின் அரச அதிகாரிகளை உள்ளடக்கிய 105 பேர் கொண்ட குழு ஒன்று நேற்று முன்தினம் (14) சிறீலங்காவை வந்தடைந்துள்ளது.

மூன்று நாள் பயணமாக வந்துள்ள இந்தக் குழு மாலைதீவின் துணை அரச தலைவர் பைசல் நசீம் தலைமையில் நாடாளுமன்ற பேச்சாளர் மொகமட் நஸ்டீன் மற்றும் அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளடக்கியதாகும்.

இந்தியா, சிறீலங்கா மாலைதீவு ஆகிய நாடுகள் இணைந்து புலனாய்வுக் கட்டமைப்பு ஒன்றை உருவாக்கிய பின்னர் இந்த குழுவின் பயணமும், இந்தியப் பிரதமரின் பயணமும் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இது இந்து சமுத்திரப் பிராந்தியத்தின் ஆதிக்கத்தை கையகப்படுத்த இந்திய முனைவதைக் காட்டுவதாக தெரிவிக்கப்படுகின்றது.