இலங்கை : அமைச்சரவையில் இடம்பெறாமல் புதிய அரசாங்கத்திற்கு ஆதரவளிக்க 10 கட்சிகள் தீர்மானம்

பத்து கட்சிகள் அமைச்சரவையில் இடம்பெறாமல் புதிய அரசாங்கத்திற்கு ஆதரவளிக்க தீர்மானித்துள்ளன என முன்னாள் அமைச்சர் உதயகம்மன்பில தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா பொதுஜனபெரமுனவிலிருந்து வெளியேறிய பத்து கட்சிகள் ரணில்விக்கிரமசிங்க அரசாங்கத்தை ஆதரிப்பதற்கு தீர்மானித்துள்ளன என்றும்  எனினும் இந்த கட்சிகள் எந்த அமைச்சரவையும் பொறுப்பையும் ஏற்கப்போவதில்லை எனவும்  உதயகம்மன்பில குறிப்பிட்டுள்ளார்.

எனினும் மக்களின் பிரச்சினைகளிற்கு தீர்வை காண்பதற்காக பிரதமர் நியமித்துள்ள குழுக்களின் நடவடிக்கைகளில் இணைந்துகொள்வோம் என உதயகம்மன்பில தெரிவித்துள்ளார்.

பிரதமரை இன்று சந்தித்த பின்னரே இதனை தெரிவித்துள்ள அவர் அனைவரையும் தங்கள் கட்சி வேறுபாடுகளை கைவிட்டுவிட்டு நெருக்கடிகளிற்கு தீர்வை காண்பதற்கான கூட்டுமுயற்சிகளில் இணைந்துகொள்ளுமாறு பிரதமர் வேண்டுகோள் விடுத்தார் என்று தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், நாட்டின் பொருளாதார நன்மைக்காக புதிய அரசாங்கம் மேற்கொள்ளும் நடவடிக்கைகளிற்கு ஆதரவளிக்க தயார் ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Tamil News