வேறுபட்ட தடுப்புமருந்துகளின் இணைந்த பரிசோதனை வெற்றி

கோவிட்-19 நோயை கட்டுப்படுத்தும் முயற்சியாக உலகம் எங்கும் தடுப்பு மருந்துகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. ஆனால் மக்கள் சனத்தொகைக்கு ஏற்றவாறு பெருமளவான தடுப்பு மருந்துகளை உற்பத்தி செய்யமுடியாத நிலையில் தடுப்பு மருந்து உற்பத்தி நிறுவனங்கள் உள்ளன.

இந்த பற்றாக்குறையை நீக்கும் பொருட்டு, வழமையாக ஒரே நிறுவனத்தின் தடுப்புமருந்தை இரு தடவைகள் ஏற்றுவதற்கு பதிலாக வெவ்வேறு நிறுவனங்கள் தயாரித்த மருந்துளை பயன்படுத்துவதில் மருத்துவர்கள் வெற்றி கண்டுள்ளதாக இன்ராபக்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

பிரித்தானியாவின் ஆஸ்ரா செனீக்கா தடுப்பு மருந்து மற்றும் ரஸ்யாவின் ஸ்புட்னிக் -5 தடுப்பு மருந்து ஆகியவை முதலாவது மற்றும் இரண்டாவது தடவையாக போடப்பட்டு மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் எந்தவித பக்கவிளைவுகள் அற்ற தன்மை கண்டறியப்பட்டுள்ளதாக அது மேலும் தெரிவித்துள்ளது.

இதனிடையே, இரு வேறு தடுப்புமருந்துகளை இணைந்து பயன்படுத்துவது மக்களின் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் என பிரித்தானியாவின் விஞ்சானிகள் முன்னர் தெரிவித்திருந்ததும் இங்கு குறிப்பிடத்தக்கது.