Tamil News
Home செய்திகள் வெடுக்குமாறிமலை ஆதிலிங்க கோயிலை சிங்கள மயமாக்க முயற்சி – கஜேந்திரன்

வெடுக்குமாறிமலை ஆதிலிங்க கோயிலை சிங்கள மயமாக்க முயற்சி – கஜேந்திரன்

வெடுக்குமாறிமலை ஆதிலிங்க ஐய்யனார் கோயிலை திட்டமிட்டு சிங்களமயமாக்கும் முயற்சிகள் இடம்பெற்று வருகின்றன. அதன் காரணமாகவே வழிபாட்டில் ஈடுபட செல்லும் தமிழர்கள் மீதான வன்முறைகளை பாதுகாப்பு படையினர் கட்டவிழ்த்து விடுகின்றனர் என யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் தெரிவித்தார்.

சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவுக்கு எதிராக எதிர்க்கட்சியால் கொண்டுவரப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான மூன்றாம் நாள் விவாதத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு வலியுறுத்தினார்.

தொடர்ந்து உரையாற்றிய கஜேந்திரன், “வெடுக்குநாறிமலையில் தமிழர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்கள் அடிப்படை மனித உரிமை மீறல் என்பதுடன், மதச் சுதந்திரத்தை பறிக்கும் செயலாகும். தமிழ் மக்களின் வழிபாட்டு உரிமையை பறிப்பதன் ஊடாக இந்த ஆலயத்தை சிங்கள மயமாக்க முற்படுகின்றனர்.

எம்மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களுக்கு எதிராக பொலிஸ்மா அதிபரும் பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சரும் எவ்வித நடவடிக்கையையும் எடுக்கவில்லை. இந்த அனைத்துச் செயல்பாடுகளும் தொல்பொருள் அமைச்சர் விதுர விக்ரமநாயக்கவின் நேரடி நெறிப்படுத்திலேயே நடைபெற்றது. அமைச்சரின் செயல்பாடு இனவாதம் மிக்கதாகவே உள்ளது. இவர்களுக்கு எதிராக நாடாளுமன்றத்தின் ஊடாக நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்” என்றும் கஜேந்திரன் தெரிவித்தாா்.

Exit mobile version