Tamil News
Home செய்திகள் விவசாய காணிகளில் மண் அகழ்வு தொடர்பில் பொதுமக்கள் சுட்டிக்காட்டு- நடவடிக்கை எடுப்பதாகவும் உறுதி

விவசாய காணிகளில் மண் அகழ்வு தொடர்பில் பொதுமக்கள் சுட்டிக்காட்டு- நடவடிக்கை எடுப்பதாகவும் உறுதி

வவுனியா ஓமந்தை பகுதியில் நீண்ட காலமாக விவசாயம் செய்யப்பட்ட காணிகளில் மண் அகழப்பட்டு வருவதாகவும் அங்கிருந்த மரங்கள் அழிக்கப்பட்டுள்ளதாகவும் புகைப்பட ஆதாரங்களுடன் மக்கள் சுட்டிக்காட்யுள்ளனர்.

வவுனியா பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தின் போதே இவ்வாறு சுட்டிக்காட்டப்பட்டது.
இதன்போது, நாம் நீண்ட காலமாக விவசாயம் செய்த காணிகள் யுத்தம் காரணமாக கைவிட்டு சென்றிருந்தோம் எனினும் தற்போது நாம் அங்கு குடியேறி விவசாய நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்ற போதிலும் அதற்கு அனுமதி மறுத்து கிரவல் அகழும் செயற்பாடு முனனெடுக்கப்படுகின்றது.
அங்கிருந்த பாரி மரங்கள் அழிக்கப்படுகின்றது. எனவே குறித்த காணிகளில் சிலவற்றுக்கு காணி அனுமதிப்பத்திரம் எமக்கு இல்லாத நிலையில் இவ்வாறான செயற்பாடு முன்னெடுக்கப்படுகின்றது.
எனவே சுமார் 100 ஏக்கர் காணியை காப்பாற்ற வேண்டும் என  பொது மக்கள் தெரிவித்தனர். இதன்போது பிரதேச செயலாளர் 45 ஏக்கர் காணியில் இவ்வாறான செயற்பாடு முன்னெடுக்கப்படுகின்றது. இது தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.
இந்த விவகாரத்தில் ஒருங்கிணைப்பு குழுவின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் கு. திலீபன் குறித்த நடவடிக்கை தொடர்பில் அதிகாரிகள் சகிதம்  குறித்த காணியைப் பார்த்து  நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்.
Exit mobile version