விலங்குகளில் இருந்து கொரோனா பரவும் ஆபத்து – ரஷ்யாவில்  செல்ல பிராணிகளுக்கு தடுப்பூசி

வீட்டு விலங்குகளுக்கு கொரோனா தொற்று ஏற்படுவதை தடுக்கும் விதமாக ரஷ்யாவில் செல்ல பிராணிகளுக்கு தடுப்பூசி போடும் பணி தொடங்கியிருக்கிறது. 200க்கும் மேற்பட்ட நாடுகளில் கோடிக்கணக்கானோரை தாக்கியுள்ள கொரோனா சில நாடுகளில் விலங்குகளையும் விட்டுவைக்கவில்லை.

சில மாதங்களுக்கு முன் அமெரிக்க  விலங்கியல் பூங்காவில் பராமரிக்கப்பட்டு வந்த புலிகளுக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. சமீபத்தில் இந்தியாவில் உத்திரப்பிரதேசம், தெலுங்கானா மாநிலங்களில் விலங்கியல் பூங்காக்களில் உள்ள 10 சிங்கங்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டன.

கொரோனா வைரஸ் விலங்குகள் மூலமாகவும் பரவும் என்பது உறுதியானதை அடுத்து ரஷ்யாவில்  வீட்டு வளர்ப்பு விலங்குகளுக்கு தடுப்பூசி போடும் பணிகளை ரஷ்யா தொடங்கியிருக்கிறது.