Tamil News
Home செய்திகள் விமானசேவைக் கட்டணங்களை குறைக்குமாறு சிறிலங்கா பிரதமர் கட்டளை

விமானசேவைக் கட்டணங்களை குறைக்குமாறு சிறிலங்கா பிரதமர் கட்டளை

விமானசேவைக் கட்டணங்களைக் குறைக்குமாறு சிறிலங்கன் விமான சேவைக்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உத்தரவிட்டுள்ளார். அலரி மாளிகையில் நேற்று நடைபெற்ற கூட்டத்திற்கு தலைமை தாங்கிப் பேசும் போது பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இந்தப் பணிப்புரையை விடுத்ததாக தேசிய கொள்கை மற்றும் பொருளாதார அமைச்சின் ஆலோசகர் சுதர்ஷன குணவர்த்தன தெரிவித்தார்.

ஈஸ்டர் தின தாக்குதலின் பின்னரான சுற்றுலாத்துறைக்கு ஏற்பட்டுள்ள இழப்பை சீர்செய்யும் ஒரு நடவடிக்கையாக விமானக் கட்டணங்களை குறைக்குமாறு பணிப்புரை விடுத்தார்.

சிறிலங்கன் விமான சேவை கட்டணங்களைக் குறைத்தால் மற்றைய விமான சேவைகளும் கட்டணங்களை குறைக்க வேண்டியிருக்கும். அத்துடன் விமான எரிபொருள் கட்டணம் அடுத்த ஆறு மாதங்களுக்குள் குறைக்கப்பட வேண்டும் என்றும் பிரதமர் மேலும் கூறினார். இதற்கு இணக்கம் தெரிவிக்கப்பட்டது.

அதன்படி விமான சீட்டுக் கட்டணங்களை குறைக்கவும், எரிபொருள் செலவை மாற்றியமைக்கவும் இணக்கம் காணப்பட்டது. அத்துடன் மறுசீரமைத்து அதனை 40 அமெரிக்க டொலர் என்ற அளவுக்கு கொண்டு வருவதென்றும் பரிந்துரை செய்யப்பட்டது. இது தொடர்பான அமைச்சரவை பத்திரமொன்றும் பிரதமரினால் விரைவில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.

Exit mobile version