விண்வெளியில் அதிகநாள் தங்கிய ரசிய விண்வெளி வீராங்கனை

பெண் விண்வெளி அதிகாரி தனது நீண்டநாள் பயணத்தை நாள் பயணத்தை நிறைவு செய்து கடந்தவியாழக்கிழமை(06)பூமியை வந்தடைந்துள்ளார்.கிறிஸ்ரினா கோச் என்ற விண்வெளி அதிகாரியே கடந்த 328 நாட்கள் அனைத்துலக விண்வெளி நிலையத்தில்தொடர்ச்சியாக தங்கியிருந்த பின்னர் வியாழக்கிழமை காலை 9 மணியளவில் கசகிஸ்த்தான் பகுதியில் தரையிறங்கியுள்ளார்.

இதற்கு முன்னர் அமெரிக்காவைச் சேர்ந்த பெகி விற்சன் என்ற விண்வெளி அதிகாரி விண்வெளி நிலையத்தில் தொடர்ச்சியாக தங்கியிருந்து சாதனை புரிந்திருந்தார். ஆனால் அவரின் சாதனையை கிறிஸ்ரினா முறியடித்துள்ளார்.

எனினும் தொடர்ச்சியாக அல்லாது 2002 தொடக்கம் 2017 ஆண்டு காலப் பகுதியில் மூன்று தடவைகள் விண்வெளிக்குச் சென்று அதிக நாட்கள் தங்கியிருந்தது என்ற சாதனையை தற்போதும் விற்சன் தக்கவைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தனது பயணத்தின் போது 5248 தடவைகள் பூமியை சுற்றிவந்த கிறிஸ்ரினா 223 மில்லியன் கி.மீ தூரம் பயணம் செய்துள்ளார். இது 291 தடவைகள் பூமியில் இருந்து சந்திரனுக்கு சென்று வரும் தூரத்திற்கு இணையானது.