Tamil News
Home உலகச் செய்திகள் விடுவிக்கப்பட்ட அகதிகள் மீள் குடியமர்த்தப்பட மாட்டார்கள் – அவுஸ்ரேலிய உள்துறை

விடுவிக்கப்பட்ட அகதிகள் மீள் குடியமர்த்தப்பட மாட்டார்கள் – அவுஸ்ரேலிய உள்துறை

விடுவிக்கப்பட்ட அகதிகள் அவுஸ்திரேலியாவில் மீள்குடியமர்த்தப்பட மாட்டார்கள் என அவுஸ்திரேலிய உள்துறை அறிவித்துள்ளது.
சமீபத்தில் அவுஸ்திரேலிய தடுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ள அகதிகளுக்கு வழங்கப்பட்ட இறுதிப் புறப்பாடு இணைப்பு விசா குறித்து கருத்துத் தெரிவித்துள்ள அவுஸ்திரேலிய உள்துறை, அவுஸ்திரேலியாவிலிருந்து வெளியேறுவதற்கான ஏற்பாடுகளுக்கு முன்னதாக தற்காலிகமாக அவுஸ்திரேலிய சமூகத்தில் தங்க மட்டுமே இந்த இணைப்பு விசா அனுமதிக்கிறது எனக் கூறியிருக்கிறது.
“அவுஸ்திரேலிய கொள்கை என்பது தெளிவாக உள்ளது. சட்டவிரோத கடல்வழிப் பயணத்தின் மூலம் அவுஸ்திரேலியாவுக்கு வருபவர்கள் ஒருபோதும் இங்கு நிரந்தரமாக குடியமர்த்தப்பட மாட்டார்கள்,” என அவுஸ்திரேலிய உள்துறை குறிப்பிட்டுள்ளது.
“அவுஸ்திரேலியாவுக்கு மருத்துவ சிகிச்சைக்காக கொண்டு வரப்பட்ட இந்த அகதிகள், மருத்துவ சிகிச்சையை முடித்துக் கொண்டு அமெரிக்காவில் மீள்குடியேறுவதற்கான ஏற்பாட்டை செய்ய வேண்டும் அல்லது நவுரு, பப்பு நியூ கினியா தீவுகளுக்கு திரும்ப வேண்டும் அல்லது சொந்த நாட்டுக்கே திரும்பிச் செல்ல வேண்டும்,” என அவுஸ்திரேலிய உள்துறை சுட்டிக்காட்டியுள்ளது.
Exit mobile version