Tamil News
Home செய்திகள் விடுதலை கோரி நளினி தாக்கல் செய்த வழக்கு தள்ளுபடி

விடுதலை கோரி நளினி தாக்கல் செய்த வழக்கு தள்ளுபடி

ராஜீவ் காந்தி கொலைக் குற்றத்திற்காக தண்டனை பெற்று வரும் நளினி, தான் சட்ட விரோதமாக தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக தாக்கல் செய்திருந்த வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்தது.

ராஜீவ் காந்தி கொலைக் குற்றத்திற்காக தண்டனை பெற்று வரும் 7பேரையும் விடுதலை செய்யுமாறு தமிழக அமைச்சரவை கடந்த 2018ஆம் ஆண்டு தீர்மானம் நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பியிருந்தும், ஆளுநர் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்காததால், தன்னை அடைத்து வைத்திருப்பது சட்டவிரோதம் என நளினி வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்திருந்தது. நளினி தரப்பு வாதங்களை விசாரணை செய்த நீதிபதிகள் சுப்பையா, பொங்கியப்பன் ஆகியோர் வழக்கை தள்ளுபடி செய்வதாக கூறி தீர்ப்பளித்தனர்.

ஆளுநரின் அதிகாரத்தின் மீது கேள்வி எழுப்ப முடியாது. நளினி சட்டவிரோத காவலில் இல்லை. அத்துடன் மத்திய அரசும் தங்களின் அனுமதியின்றி 7பேரையும் விடுதலை செய்ய முடியாது எனக் கூறியிருந்தது. என்று கூறி வழக்கை தள்ளுபடி செய்தனர்.

Exit mobile version