வவுனியா மன்னகுளம் பகுதி தொல்லியல் திணைக்களத்தால் ஆக்கிரமிப்பு

வவுனியா வடக்கு பிரதேச செயலகத்திற்குற்பட்ட மன்னகுளம் பகுதியில் பழைய செங்கல் இடிபாடுகளுடன் கூடிய பௌத்த வழிபாடு இடம் பெற்றமைக்கான ஆதாரம் இருப்பதாக தொல்லியல் திணைக்களம் இன்று தகவல் வெளியிட்டுள்ளது.

FB IMG 1621167962120 வவுனியா மன்னகுளம் பகுதி தொல்லியல் திணைக்களத்தால் ஆக்கிரமிப்பு

வவுனியா வடக்கு பிரதேச செயலகம் 255 B கிராம அலுவலர் பிரிவிற்குட்பட்ட மன்னகுளம் பகுதியில் தொல்பொருள் சின்னங்களை கொண்ட ஒரு தளம் காணப்படுவதாக சிங்க ரெஜிமென்டின் 16 வது படைபிரிவின்  கட்டளை அதிகாரியின் அறிவிப்பை தொடர்ந்து வவுனியா தொல்பொருள் அலுவலகத்தை சேர்ந்த அதிகாரிகள்  குழுவினரால்  ஆய்வு மேற்கொள்ளப்பட்டிருந்தது.

FB IMG 1621167964791 வவுனியா மன்னகுளம் பகுதி தொல்லியல் திணைக்களத்தால் ஆக்கிரமிப்பு

குறித்த பகுதியில் 60-70 செ.மீ உயரத்திற்கு இடைப்பட்ட 12 கற் தூண்களை கொண்ட கட்டிட அமைப்பும் அதில் சிங்கள எழுத்தினால் பூஜை தொடர்பாக எழுதப்பட்டிருப்பதாகவும் கி.மு 8,9 ஆம் நூற்றாண்டுகளுக்குரியது எனவும், அங்கு பழைய கட்டிடங்களுக்கான செங்கல் மற்றும் ஒடுகள், இருப்பதாகவும் இக் கட்டிடம் 50 சதுர மீற்றர் பரப்பளவை கொண்டதாக இருந்திருக்கலாம் எனவும்  தாெல்லியல் திணைக்கள அதிகாரிகள் கூறியுள்ளனர்.

FB IMG 1621167974420 வவுனியா மன்னகுளம் பகுதி தொல்லியல் திணைக்களத்தால் ஆக்கிரமிப்பு

வவுனியா வடக்கில் வெடுக்குநாறிமலை, கோடலிபறிச்சான் என தாெடர்ந்து தற்போது மன்னகுளம் பகுதியையும் தாெல்லியல்  திணைக்களம் உரிமை கோரியிருப்பதும் குறிப்பிடத்தக்கது.