பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் 10.04.2023 ஆம் திகதிய 03/2023 ஆம் இலக்க சுற்று நிருபத்துக்குமைவாக பல்கலைக்கழகப் பேரவையின் பதவி வழிச் செயலரான பதிவாளரால் விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.
விண்ணப்பிப்பதற்கான தகைமைகள் மற்றும் மேலதிக விபரங்களை https://vau.ac.lk/calling-applications-for-the-post-of-vice-chancellor/ என்ற இணையத் தளத்தில் பார்வையிட முடியும்.
ஆர்வமுடையவர்கள் தமது விண்ணப்பங்களை இம் மாதம் 21 ஆம் திகதி பிற்பகல் 3:00 மணிக்கு முன்னராகப் பல்கலைக்கழகப் பதிவாளருக்குக் கிடைக்கக் கூடியவாறு தபால் மூலம் அனுப்பி வைக்கப்பட வேண்டும் என்றும், விண்ணப்பம் மற்றும் ஆவணங்களின் மென்பிரதி பதிவாளரது registrar@vau.ac.lk என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பி வைக்கப்படவேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.