Tamil News
Home செய்திகள் வவுனியாவில் முடக்கப்பட்ட  வியாபார நிலையங்கள் மீண்டும் திறக்க அனுமதி

வவுனியாவில் முடக்கப்பட்ட  வியாபார நிலையங்கள் மீண்டும் திறக்க அனுமதி

வவுனியாவில் கொரோனா பரவல் அச்சம் காரணமாக முடக்கப்பட்ட பகுதிகளில் உள்ள வியாபார நிலையங்கள்  இன்று முதல்   வழமை போன்று  செயற்பட முடியுமென சுகாதார பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

வவுனியாவில் கொரோனா தொற்றாளர்கள் அதிகரித்த நிலையில் வவுனியாவில் பல இடங்கள் முடக்கப்பட்டு வர்த்தக நிலையங்களில் பணியாற்றும் உரிமையாளர்கள், ஊழியர்களுக்கு பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

இதையடுத்து நகரின் பஜார் வீதி, தர்மலிங்கம் வீதி, சந்தை சுற்றுவட்ட வீதி, மில் வீதி, சூசைப்பிள்ளையார் குள வீதி, கந்தசுவாமி கோவில் வீதி, ஹொரவப்பொத்தானை வீதியின் ஒரு பகுதி என்பன சுகாதார பிரிவினரினால் முடக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டன.

இம்மாதம் 21, 22, 23 ஆகிய மூன்று தினங்களாக பி.சி.ஆர் அல்லது அன்டிஜன் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு பிராந்திய சுகாதார பணிமனையினால் வழங்கப்படும் பரிசோதனை அட்டையை வைத்திருக்கும் உரிமையாளர் மற்றும் ஊழியர்கள் மட்டுமே வர்த்தக நிலையங்களை திறந்து பணிபுரிவதற்கு அனுமதிக்கப்படுவார்கள் என்று சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

பி.சி.ஆர்  பரிசோதனை மேற்கொள்ள தவறியவர்கள் வர்த்தக சங்க காரியாலயத்தில் படிவத்தினைபெற்று பூர்த்திசெய்து வழங்குவதன் மூலம் எதிர்வரும் செவ்வாய் கிழமை   நகரசபை மண்டபத்தில் பரிசோதனையை மேற்கொண்டு அட்டையை பெற்ற பின்னரே வியாபார நடவடிக்கைகளில் ஈடுபட முடியும் எனவும் மீறி செயற்படும் நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளவுள்ளதாகவும் சுகாதார பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

Exit mobile version