Home செய்திகள் வவுனியாவில் ஊரடங்கு தளர்த்தப்பட்டதும் நகரில் மக்கள் வெள்ளம்

வவுனியாவில் ஊரடங்கு தளர்த்தப்பட்டதும் நகரில் மக்கள் வெள்ளம்

கடந்த சில நாட்களாக வட மாகாணத்தில் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்ட நிலையில் இன்று காலை 6 மணிமுதல் ஊரடங்கு சட்டம் தளர்த்தப்படடது.

இந்நிலையில் வவுனுpயா நகர்ப்பகுதியில் மக்கள் அதிகளவில் வருகை தந்து பொருட்கொள்வனவில் இடுபட்டதனை அவதானிக்க முடிந்தது.

நகர்ப்பகுதியில் பல்பொருள் விற்பனை நிலையம், மரக்கறி விற்பனை நிலையம் மற்றும் மருந்தகங்களை திறப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டிருந்த நிலையில் வேறு பொருட்கொள்வனவு தேவையுடையோரை கருத்தில் கொண்டு விவசாய பொருட்களை விறப்னை சயெ;யும் கடைகள், பழக்கடைகள் என்பவவும் திறக்கப்பட்டிருந்தன.

இதன் காரணமாக மக்கள் நொசல் அதிகமானமையினால் அதிகளவான பொலிஸார் கடமையில் ஈடுபடுத்தப்பட்டு மக்களை சீர்படுத்தும் செயற்பாட்டை முன்னெடுக்கப்பட்டது.

எரிபொருள் நிலையங்களில் மக்கள் நீண்ட வரிசையாக நின்றதுடன் பலபொருள் விற்பனை நிலையங்களிலும் மக்கள் நீண்ட வரிசையில் நின்றிருந்தனர்.

அதிகளவான வெயில் வவுனியா மாவட்டத்தில் பதிவாகி வருகின்ற நிலையிலும் மக்கள் வெப்பத்தினையுமு; பொருட்படுத்தாது பொருட்கொள்வனவில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

001 1 வவுனியாவில் ஊரடங்கு தளர்த்தப்பட்டதும் நகரில் மக்கள் வெள்ளம்

Exit mobile version