Tamil News
Home செய்திகள் வடக்கில் மேலும் 28 பேருக்கு கொரோனா உறுதி – மன்னாரில் 16 பேருக்கு தொற்று

வடக்கில் மேலும் 28 பேருக்கு கொரோனா உறுதி – மன்னாரில் 16 பேருக்கு தொற்று

வடக்கு மாகாணத்தில் மேலும் 28 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று நேற்று உறுதி செய்யப்பட்டது. இவர்களில் 10 பேர் உடுவில் சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் இனங்காணப்பட்டுள்ளனர் என்று வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.

யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மருத்துவபீட ஆய்வுகூடத்தில் 255 பேரின் மாதிரிகள் பி.சி.ஆர். பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது. இவர்களில் 10 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது.

இவர்களில் 6 பேர் நேற்று முன்தினம் உடுவிலில் கண்டறியப்பட்ட இலங்கை வங்கி ஊழியர் ஒருவருடன் நேரடித் தொடர்புடையவர்கள். மேலும் மூவர் இ.போ.ச. காரைநகர் சாலை நடத்துநர் ஒருவருக்கு நேற்று முன்தினம் தொற்று கண்டறியப்பட்ட நிலையில் அவருடைய உறவினர்கள். ஒருவர் யாழ். பல்கலைக்கழகத்தில் ஒழுக்காற்று அதிகாரி பதவியில் உள்ளவர்.

இதேவேளை, யாழ். போதனா வைத்தியசாலையில் நேற்று 450 பேரின் மாதிரிகள் பி.சி.ஆர். பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன. இவர்களில் 18 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதேவேளை, யாழ்ப்பாணம் சிறைச்சாலை கைதி ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டது.

மன்னார் நகரில் 16 பேருக்கு தொற்று நேற்று கண்டறியப்பட்டது. இவர்களில் 8 பேர் மன்னார் மீன் சந்தையில் கண்டறி யப்பட்டுள்ளனர். மன்னார் மீன் சந்தைத் தொழிலாளிஒருவர் ரயிலுடன் மோதி உயிரிழந்த நிலையில் அவருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. இதனால் மன்னார் மீன் சந்தையில் நேற்று எழுமாறாக சிலரிடம் மாதிரிகள் பெறப்பட்டன. இவர்களில் 8 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது.

மேலும் தனியார் நிதி நிறுவனமான கொமர்ஷல் கிறடிட்டின் மன்னார் கிளையில் பணியாற்றும் சிலருக்கு கொரோனா தொற்று அண்மையில் கண்டறியப்பட்டது. அங்கு பணியாற்றும் மேலும் இருவருக்கு தொற்று நேற்று உறுதிப்படுத்தப்பட்டது. மேலும், மன்னார் நகர் தொற்றாளர்களுடன் தொடர்புடைய மேலும் 6 பேருக்கு நேற்றுத் தொற்று உறுதிப்படுத் தப்பட்டது. இவர்கள் சுயதனிமைப்படுத்தப்பட்டவர்கள். மன்னார் பொது வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட 29 வயது கர்ப்பவதிக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டது என்றும் மருத்துவர் கேதீஸ்வரன் தெரிவித்தார்.

Exit mobile version