Tamil News
Home உலகச் செய்திகள் வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

வங்க கடலில் கடந்த 21ம் திகதி  உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதிதான், தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று புயலாக  மாறியது.

இதன் காரணமாக புதுச்சேரி மரக்காணம் ஆகிய பகுதிகளோடு தமிழகமும் பாதிப்பை சந்தித்தது.

மேலும் இந்த புயல் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை என்றாலும், தமிழகத்தின் வட மாவட்டங்களில் பரவலாக கன மழை பெய்தது. அந்த புயல்  ஆந்திரா அருகே காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவிழந்து நிலைக்கொண்டிருக்கிறது.

இந்த நிலையில் அதன் தொடர்ச்சியாக தென்கிழக்கு வங்கக் கடல் மற்றும் அதனையொட்டிய இந்திய பெருங்கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவானதாக  வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்தக் காற்றழுத்த தாழ்வு நிலை அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும், 48 மணி நேரத்தில் புயலாக மாறவும் வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Exit mobile version