லண்டன் SOAS பல்கலைக்கழகத்தில் திருவள்ளுவர் தினம்.

பிரித்தானிய தலைநகர் லண்டனில் உள்ள சோஆஸ் SOAS பல்கலைக்கழகத்தில்; ஐக்கியஇராச்சியத் தமிழ்த்துறையின் சார்பாக திருவள்ளுவர் தினம் கொண்டாடப்பட்டுள்ளது.

இந்த நிகழ்வின் முக்கிய அம்சமாக பல்கலைக்கழக நுழைவாயிலில் அமைத்திருக்கும் திருவள்ளுவர் சிலைக்கு> ஐக்கிய இராச்சியத்தில் இயங்கும் பல்வேறு அமைப்புகளின் சார்பாக மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது.

இந்த நிகழ்வில் சரே தமிழ் பள்ளிக்கூடம், இலண்டன் தமிழ் சங்கம், குரொய்டன் தமிழ் சங்கம், வாசகர் வட்டம், இந்திய வர்த்தக குழுமம் பிரித்தானிய தமிழர் பேரவை, தமிழ் தகவல் நடுவம், ஈலிங் அம்மன் கோவில், முன்னாள் மாணவர் அமைப்பு ஆகிய அமைப்புக்களின் சார்பான பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.

தமிழ்த்தாய் வாழ்த்துடன் ஆரம்பித்த இந்த விழாவில் ஐக்கிய இராச்சியத்தமிழ்த்துறை ஒருங்கிணைப்பாளர் திரு. செலின் சார்ச் அவர்கள் தமிழ்த்துறையின் தேவை பற்றி அனைவருக்கும் எடுத்துரைத்தார்.

நிகழ்ச்சியின் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்ட, தெற்காசியப் பள்ளியின் தலைவர் முனைவர்.எட்வர்ட் சிம்ப்சன் சிறப்புரையாற்றினார். வாழ்த்துரையை ளுழுயுளு வெளியுறவுத் துறையின் பொறுப்பாளர் ஆபியா அலிம் அவர்கள் வழங்கினார்.

அதன்பின்னர் எட்வர்ட் சிம்ப்சன் SOAS தெற்காசியப் பள்ளியின் இணைத்தலைவர் முனைவர் அவினாசு பலிவால்> தமிழ்த்துறை சார்பில் முனைவர். பொன்னம்மாள் பாண்டியன், மற்றும் தலைவர் வித்யா நந்தகுமார் ஆகியோர் இணைந்து திருவள்ளுவருக்கு மாலையிட்டு மரியாதை செய்தனர்.

சனவரி 26 அன்று SOASBrunei Gallery Lecture Theatre இல் நடைபெறும் தமிழ் பொங்கல் விழா பற்றி தமிழ்த்துறை பொருளாளர் திரு.தர்மேந்திரன் அவர்கள் அனைவருக்கும் எடுத்துரைத்து, விழாவில் பங்கெடுக்குமாறு அழைப்பு விடுத்தார்.

நன்றியுரையை இணை-பொருளாளர் திரு.விமலதாசன் அவர்கள் வழங்கினார். நிகழ்ச்சியை ஐ.பி.சி தமிழின் இராகப்பிரியா அவர்கள் தொகுத்து வழங்கினார்.

SOAS இல் தமிழ்க்கல்வியை மீட்டுருவாக்கம் செய்யும் பணிகளை ஐக்கிய இராச்சியத் தமிழ்த்துறை மேற்கொண்டு வருகிறது. இந்தத்திட்டத்திற்கு பல்கலைகழக நெடுங்கால வைப்பு நிதியாக பத்து மில்லியன் பிரித்தானிய பவுண்டுகள் தேவைப்படுகிறது.

இந்த வைப்புநிதியை ஒருமுறை உருவாக்கிவிட்டால் அது பல்கலைக்கழகம் இயங்கும் வரை தமிழ்க்கல்வியை வழங்க போதுமானது.

தமிழ்த்துறை பற்றிய மேலும் தகவல்களுக்கு www.tamilstudies.uk என்ற தளத்தில் சென்று பார்க்கலாம். இந்த வைப்பு நிதிக்கு பங்களிக்க விரும்புபர்கள் இதே தளத்தில் சென்று பல்கலைக்கழகத்திற்கு நேரடியாக அனுப்பலாம்.