Tamil News
Home செய்திகள் லசந்த விக்கிரமதுங்கவின் மகள் கோத்தபயாவிற்கு எதிராக மேல்முறையீடு

லசந்த விக்கிரமதுங்கவின் மகள் கோத்தபயாவிற்கு எதிராக மேல்முறையீடு

லசந்த விக்கிரமதுங்கவின் மகள் அகிம்சா விக்கிரமதுங்க அமெரிக்க கலிபோர்ணியா மாநிலத்தில் கோத்தபயாவிற்கு எதிராக தொடுத்த வழக்கை அந்த நீதிமன்றம் தள்ளுபடி செய்த நிலையில், மேல் முறையீடு செய்யவுள்ளதாக அறிய முடிகின்றது.

இந்த வழக்கை சட்டரீதியாக முன்னெடுப்போம் என கோத்தபயாவின் சட்டத்தரணி கூறியுள்ளார்.

கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கோத்தபயாவின் ஜனாதிபதி சட்டத்ரணிகளான ரஷீக் சறூக், குஷான் டி அல்விஸ், மயுர குணவன்ச, வீரக்கோன் ஆகியோர் குறிப்பிட்டுள்ளனர்.

கோத்தபயா ராஜபக்ஸவிற்கு எதிராக பல்வேறு நடவடிக்கைகள் அவரை தேர்தலில் போட்டியிடுவதை தடுக்கும் முகமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

ஒரு ஜனநாயக நாட்டில் ஒரு ஜனநாயக சூழலில் இவ்விதமான நடவடிக்கைகள் வரவேற்கத்தக்கதல்ல. கோத்தபயாவிற்கு எதிராக அவரது குடியுரிமை கடவுச்சீட்டு என்பவற்றைக் கேள்விக்கு உட்படுத்தி கொழும்பில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இதனை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

பொது மக்கள் நலனிற்கும் தொடரப்பட்ட வழக்கிற்கும் சம்பந்தம் இல்லை என்று இவ்வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது. அமெரிக்காவில் தொடரப்பட்ட கோத்தபயாவிற்கு எதிரான வழக்கை விசாரிக்க எவ்விதமான அடிப்படையும் இல்லை என அந்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

உண்மையில் லசந்தவின் கொலை தொடர்பில் நாமும் கவலையடைகின்றோம். இருப்பினும் கொலை நடந்து 10 வருடங்களின் பின்னர் அமெரிக்காவில் வழக்குத் தாக்கல் செய்யப்படுவதன் காரணம் என்ன? கோத்தபயா ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதை தடுக்கவே இவ்வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இவ்வழக்கின் தீர்ப்பு பற்றி நாங்கள் புரண திருப்தி அடைகின்றோம் என கோத்தபயாவின் சட்டத்தரணி கூறினார்.

அத்துடன் லசந்த விக்கிரமதுங்கவின் மகள் அகிம்சா விக்கிரமதுங்க அமெரிக்காவில் கோத்தபயாவிற்கு எதிராக தொடரவுள்ள மேன்முறையீட்டு மனுவை சட்ட ரீதியாக முழு உத்வேகத்துடன் சிந்திப்போம் என சட்டத்தரணி கூறினார்.

 

 

Exit mobile version