Tamil News
Home செய்திகள் ரிஷாத்தின் சகோதரன் மீதான விசாரணையை நிறுத்தியமை நியாயமற்றது; சட்டமா அதிபர்

ரிஷாத்தின் சகோதரன் மீதான விசாரணையை நிறுத்தியமை நியாயமற்றது; சட்டமா அதிபர்

ரியாஜ் பதியுதீனுக்கு எதிரான விசாரணைகளை குற்றப்புலனாய்வுத் திணைக்களம் நிறுத்தியமை நியாயமற்றது என சட்டமா அதிபர் பதில் பொலிஸ் மா அதிபருக்கு அறிவித்துள்ளார்.

குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் மற்றும் பிற அதிகாரிகளை சட்டமா அதிபர் தப்புல டி லிவேரா இன்று சந்தித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ரியாஜ் பதியூதீன் மீதான விசாரணை ஆவணங்களை இதன்போது அவர் பெற்றுக்கொண்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதன்போது பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனின் சகோதரர் ரியாஜ் பதியுதீனுக்கு எதிரான நிறுத்தப்பட்ட விசாரணைகளில் காணப்பட்ட குறைப்பாடுகள் குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளது.

மேலும் சம்பவம் தொடர்பில் விரிவான விசாரணைகளை மேற்கொள்ளுமாறு அதிகாரிகளுக்கு சட்டமா அதிபர் ஆலோசனை வழங்கியுள்ளதாக சட்டமா அதிபரின் ஒருங்கிணைப்பு அதிகாரி அரச சட்டத்தரணி நிஷாரா ஜயரத்ன தெரிவித்தார்.

இதேவேளை, ரியாஜ் பதியுதீனுக்கு எதிரான விசாரணைகளை குற்றப்புலனாய்வுத் திணைக்களம் நிறுத்தியமை நியாயமற்றது என சட்டமா அதிபர் பதில் பொலிஸ் மா அதிபருக்கு அறிவித்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

Exit mobile version