ரஸ்ய ஊடகவியலாளர் படுகொலைக்கு பாப்பரசர் இரங்கல்

ரஸ்ய ஊடகவியலாளர் டர்ஜா டுகினின் படுகொலைக்கு புனித பாப்பரசர் தனது இரங்கலைத் தெரிவித்துள்ளார்.

அப்பாவியான ஒருவர் குண்டுவெடிப்பில் கொல்லப்பட்டுள்ளார். அவருக்காக நான் ஆண்டவனிடம் வேண்டுகிறேன் என பாப்பரசர் பிரான்ஸிஸ் தெரிவித்துள்ளார்.

கடந்த சனிக்கிழமை(20) மாலை  ரஸ்யாவின் தலைநகர் மொஸ்கோவிற்கு அருகில் உள்ள நகர் ஒன்றில் இடம்பெற்ற கார்க் குண்டுவெடிப்பில் அவர் கொல்லப்பட்டார். ரொயாட்டா லான்ட் குரூசர் வாகனத்தின் சாரதியின் இருக்கைக்கு கீழ் பொருத்தப்பட்ட குண்டு வெடித்ததால் ஊடகவியலாளர் சம்பவ இடத்திலேயே கொல்லப்பட்டுள்ளார்.

உக்ரைன் புலனாய்வு அமைப்பை சேர்ந்த 43 வயதான நற்றலியா வோவ்க் என்பவரே தனது 12 வயது மகளுடன் ரஸ்யாவுக்குள் ஊடுருவி இந்த தாக்குதலை மேற்கொண்ட பின்னர் எஸ்ரோனியா வழியாக தப்பிச் சென்றுள்ளதாக ரஸ்யாவின் புலனாய்வுத்துறை தெரிவித்துள்ளது. குற்றவாளியை தம்மிடம் ஒப்படைக்குமாறு ரஸ்யா இதனுடன் தொடர்புடைய நாடுகளை கேட்டுள்ளது.

படுகொலை செய்யப்பட்ட டர்ஜா ரஸ்யாவை சேர்ந்த பிரபல தத்துவஞானி அலக்சாண்டர் டுகினின் மகளாவார்.