Tamil News
Home உலகச் செய்திகள் ரஸ்யாவின் நவீன ஏவுகணைகள் துருக்கியை வந்தடைந்தது – அமெரிக்கா சீற்றம்

ரஸ்யாவின் நவீன ஏவுகணைகள் துருக்கியை வந்தடைந்தது – அமெரிக்கா சீற்றம்

அமெரிக்காவின் கடுமையான எதிர்ப்புக்களையும் மீறி ரஸ்யாவின் தயாரிப்பான எஸ்-400 எனப்படும் நீண்டதூர விமான எதிர்ப்பு ஏவுகணைகளை துருக்கி கொள்வனவு செய்துள்ளது அமெரிக்காவுக்கு கடும் சீற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த ஏவுகணைகளை நாம் தெரிவுசெய்யவில்லை அது எமக்கு அவசியமானது, ஏனெனில் நாம் மிகப்பெரும் ஆபத்துக்களை சந்தித்துள்ளோம் என துருக்கி பாதுகாப்பு அமைச்சர் நேற்று (13) அமெரிக்காவுக்கு தெரிவித்துள்ளார்.

இரண்டாவது தொகுதி ஏவுகணைகளை ஏற்றிவந்த விமானம் வெள்ளிக்கிழமை (12) துருக்கியை வந்தடைந்ததைத் தொடர்ந்து இந்த கருத்தை துருக்கி தெரிவித்துள்ளது.

ரஸ்யாவுடனான ஏவுகணை உடன்பாட்டில் இருந்து வெளியேறும்படியும் அவ்வாறு இல்லையெனில் துருக்கி மீது பொருளாதாரத் தடைகளை கொண்டுவரப்போவதாகவும் அமெரிக்கா மிரட்டியபோதும் துருக்கி ஏவுகணைகளை பெற்றுள்ளது. அமெரிக்காவின் பொருளாதாரத் தடை துருக்கிக்கு 2 பில்லியன் டொலர்கள் இழப்பை ஏற்படுத்தவல்லது.
இதனிடையே அமெரிக்கா தனது பெற்றியாட் ஏவுகணைகளை வாங்குப்படி துருக்கிக்கு தற்போது ஆலோசனை வழங்கியிருந்தது. ஆனால் தாம் முன்னர் கேட்கும்போது அமெரிக்கா மறுப்பு தெரிவித்ததால்தான் ரஸ்யாவிடம் எஸ்-400 ஏவுகணைகளை வாங்கியதாக தெரிவித்துள்ள துருக்கி, ரஸ்யா தமக்கு தொழில்நுட்ப உதவிகளையும் வழங்கிவருவதாக தெரிவித்துள்ளது.
ஏவுகணைகளை ஏற்றிவந்த நான்காவது ரஸ்ய விமானமும் சனிக்கிழமை துருக்கியை வந்தடைந்துள்ளது.

Exit mobile version