ரஷ்ய எதிர்க்கட்சி தலைவரை விடுதலை செய்யக்கோரி போராட்டம் – ஆயிரக்கணக்கானோர் கைது

ரஷ்யாவில் அரசை விமர்சித்ததாகக் கைது செய்யப்பட்டுள்ள நாவல்னியை விடுவிக்க கோரி போராட்டத்தில் ஈடுபட்ட  போராட்டக்காரர்கள் மீது காவல்துறையினர் தடியடி நடத்தியதோடு அவர்களை கைது செய்துள்ளனர்.

ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின் அரசு மீது பல்வேறு விமர்சனங்களை முன்வைத்தவர் நாவல்னி. உணவில் விஷம் வைக்கப்பட்ட நிலையில், சிகிச்சைக்காக ஜெர்மனி அழைத்து செல்லப்பட்ட நாவல்னி அண்மையில் ரஷ்யா திரும்பினார்.

பழைய வழக்கு ஒன்றில் ஜாமீன் பெற்றிருந்த நாவல்னி, முறையான விசாரணைக்கு ஆஜராக நிலையில், அவர் மீண்டும் கைது செய்யப்பட்டார்.

இதுகுறித்து சர்வதேச ஊடகங்கள் தரப்பில், “ரஷ்யா திரும்பிய அந்நாட்டு எதிர்க்கட்சித் தலைவர் அலெகஸி நவால்னி கடந்த வாரம் கைது செய்யப்பட்டார். இதனைத் தொடர்ந்து ரஷ்லயா முழுவதும் அலெகஸி நவால்னியின் ஆதரவாளர்கள் பேரணி சென்றனர். இதில் 10,000க்கும் அதிகமானவர்கள் கலந்து கொண்டனர்.

இதில் 1,000க்கும் அதிகமானவர்களை ரஷ்ய  பொலிஸார் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்களில் அலெக்ஸியின் மனைவியும் ஒருவர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.