Home செய்திகள் ரவூப் ஹக்கீம் வீட்டு திருமண நிகழ்வில் கலந்து கொண்ட இந்திய அரசியல் பிரபலங்கள்

ரவூப் ஹக்கீம் வீட்டு திருமண நிகழ்வில் கலந்து கொண்ட இந்திய அரசியல் பிரபலங்கள்

சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும், அமைச்சருமான ரவூப் ஹக்கீமின் புதல்வியின் திருமண நிகழ்வில் கலந்து கொள்ள தமிழகத்தின் தி.மு.க. பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி உட்பட பல்வேறு அரசியல் முக்கியஸ்தர்கள் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர்.

இவர்களில் இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக்கின் தேசியத் தலைவர் பேராசிரியர் காதர் மொஹிதீன், திராவிட முன்னேற்றக் கழகத்தின் துணைத் தலைவரும், கலைஞர் கருணாநிதியின் புதல்வியும், இந்தியப் பாராளுமன்ற உறுப்பினருமான கே.கனிமொழி, இந்திய பாராளுமன்ற உறுப்பினர்களான ஈ.ரீ.முஹம்மத் பஷீர், பீ.வீ.அப்துல் வஹ்ஹாப், கே.நவாஸ்கனி, முன்னாள் கேரள இராஜாங்க அமைச்சர் அப்துல் மஜீத், இந்திய சட்டமன்ற உறுப்பினர் கே.ஏ.எம்.முஹம்மத் அபூபக்கர், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.அப்துல் ரஹ்மான், இந்திய யுனியன் முஸ்லிம் லீக் உறுப்பினரும் தமிழ்நாடு வக்பு சபை உறுப்பினருமான பாத்திமா முஸஃப்பர், முன்னாள் இந்திய சட்டமன்ற உறுப்பினர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லாஹ் உட்பட பல்வேறு முக்கியஸ்தர்கள் இலங்கைக்கு விஜயம் செய்துள்ளனர்.

ஈழப் போர் நடக்கும் போதும் சரி, அதற்குப் பின்னரான காலப்பகுதியிலும் சரி, ஈழத் தமிழர்களுக்காக பேச முன்வராத இந்திய அரசியல்வாதிகள் குழாம் இன்று சிறிலங்கா அரசியல்வாதி ஒருவரின் திருமண நிகழ்வில் கலந்து கொள்வதற்காக சிறிலங்கா சென்றுள்ளது. ஈழத்தில் உள்ள தமிழ் மக்களாக இருந்தாலும் சரி, இந்தியாவில் அகதிகளாக தஞ்சம் புகுந்துள்ள ஈழத் தமிழர்களாக இருந்தாலும் சரி,  அவர்களின் துன்பங்களிலோ அல்லது அவர்களின் அத்தியாவசிய தேவைகளையோ கண்டுகொள்ளாதவர்களே இந்த இந்திய அரசியல்வாதிகள்.

kani 1 ரவூப் ஹக்கீம் வீட்டு திருமண நிகழ்வில் கலந்து கொண்ட இந்திய அரசியல் பிரபலங்கள்முக்கியமாக கருணாநிதியின் மகளான கனிமொழி ஈழத் தமிழர்களின் இன்னல்கள் பற்றியோ, அவர்களின் துன்பங்கள் பற்றி சிறிலங்கா அரசிற்கு தெரிவிப்பதிலோ எந்தவித அக்கறையும் கொண்டதில்லை. இன்று கொழும்பு சென்று திருமண நிகழ்வில் கலந்து கொண்டுள்ள கனிமொழி தமிழருக்காக  ஒருதடவைகூட சிறிலங்கா சென்றது கிடையாது. ஏன் தமிழருக்கு சார்பாக இந்தியாவில் பேசியதுகூட கிடையாது.

இவர்களின் உண்மை முகத்தை கண்டறிய ஈழத் தமிழர்களுக்கு இது ஒரு சந்தர்ப்பமாக அமையட்டும்.

 

Exit mobile version