Tamil News
Home செய்திகள் ரணில் அரசு ஒரு பேயாக இருந்தாலும் ஆதரிப்போம் – சரவணபவன்

ரணில் அரசு ஒரு பேயாக இருந்தாலும் ஆதரிப்போம் – சரவணபவன்

தற்போதைய ரணில் அரசை நாம் நம்பமுடியாது, அது ஒரு பேய் அரசாக இருக்கலாம், ஆனால் தெரிந்த பேய் தெரியாத ஒன்றை விட நல்லது என நாம் கருதுகின்றோம் என தமிழ் மக்களின் ஆணைக்கு எதிராக ரணில் அரசை காப்பாற்றிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஈ. சரவணபவன் நேற்று (11) தெரிவித்துள்ளார்.

சிறீலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கா அரசு மீது கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானத்தில் இருந்து அதனை காப்பாற்றிய பின்னர் ஆற்றிய உரையின் போதே சரவணபவன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
துற்போதைய ரணில் அரசை நாம் நம்பவில்லை. ஆனால் ராஜபக்சா அரசு உருவாகுவதை நாம் விரும்பவில்லை.

இந்த அரசு அரசியல் தீர்வைக் கொண்டுவருவதாக கூறியது ஆனால் எதுவும் நடைபெறவில்லை. 70 முறைகள் பேச்சுக்கள் இடம்பெற்ற போதும் நாம் எதனையும் பெறவில்லை.

இவர்களை எமது மக்கள் தொடர்ந்து ஆதரிப்பார்களா என்பது தெரியாது. ஆனால் தெரியாத ஒன்றை விட தெரிந்த பேய் நல்லது என நான் எண்ணுகின்றேன் என அவர் தெரிவித்துள்ளார்.

இதனிடையே, வடக்கிலும் கிழக்கிலும் தொடர்ச்சியாக நில அபகரிப்புக்களும், பௌத்த மயமாக்கல்களும் இடம்பெற்றுவருகையில் சிறீலங்கா அரசு வழங்கும் அற்ப சுகங்களுக்காக தமது மக்களின் உரிமைகளை மதிக்கத் தவறும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு எதிர்வரும் தேர்தல்களில் மக்கள் நல்ல தீர்ப்பை வழங்குவார்கள் என அரசியல் அவதானிகள் தெரிவித்துள்ளனர்.

Exit mobile version