Home செய்திகள் ரணிலை சந்தித்த தமிழ்நாட்டு அரசியல்வாதிகள்

ரணிலை சந்தித்த தமிழ்நாட்டு அரசியல்வாதிகள்

தமிழ்நாட்டு அரசியல் வாதிகள் பலர்,சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரசிங்காவை இன்று காலை அலரி மாளிகையில்  சந்தித்து
கலந்துரையாடியுள்ளனர்.

இதன்போது இந்தியாவில் இருந்து வருகை தந்த இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக்கின் தேசிய தலைவர் பேராசிரியர் காதர் மொஹிதீன், திராவிட முன்னேற்ற கழகத்தின் துணைத் தலைவரும் ,  இந்திய பாராளுமன்ற உறுப்பினருமான கே.கனிமொழி, இந்திய பாராளுமன்ற (லோக் சபா) உறுப்பினர்கள், முன்னாள் கேரள இராஜாங்க அமைச்சர் அப்துல் மஜீத், இந்திய சட்டமன்ற உறுப்பினர் கே.ஏ.எம். முஹம்மத் அபூபக்கர், முன்னாள் பாராளுமன்ற (லோக் சபா) உறுப்பினர் எம். அப்துல் ரஹ்மான், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உறுப்பினரும் தமிழ் நாடு வக்பு சபை உறுப்பினர்ருமான பாத்திமா முஸஃப்பர், முன்னாள் இந்திய சட்டமன்ற உறுப்பினர் பேராசிரியர் எம்.எச். ஜவாஹிருல்லாஹ் , உட்பட பல்வேறு முக்கியஸ்த்தர்கள் அடங்கிய குழுவினர் கலந்து கொண்டிருந்தனர்.

ksa ரணிலை சந்தித்த தமிழ்நாட்டு அரசியல்வாதிகள்

குறித்த சந்திப்பின் போது இலங்கை – இந்திய மீனவர் பிரச்சினை மற்றும் இருதரப்பு உறவுகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டதாக தெரியவருகிறது.

விவசாய அமைச்சில் பேச்சுவார்த்தை

இலங்கை – இந்திய, மீனவர் நெருக்கடி பற்றி இந்தியப் பாராளுமன்ற குழுவினருக்கும், இலங்கை பிரதிநிதிகளுக்கும் இடையிலான பேச்சுவார்த்தை விவசாய அமைச்சில் நேற்று இடம்பெற்றது.

இந்த பேச்சுரவார்த்தையின் போதே இணக்கம் காணப்பட்டது.

இராஜதந்திர மட்டத்திலான பேச்சுவார்த்தையை ஆரம்பிப்பது பற்றியும் இதன் போது கவனம் செலுத்தப்பட்டது. இந்தப் பேச்சுவார்த்தையில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் துணைத் தலைவியும் இந்திய பாராளுமன்ற உறுப்பினருமான கனிமொழி கருணாநிதி, இந்தியப் பாராளுமன்ற உறுப்பினர் நவாஸ்கனி பிரதிநிதியும் இதில் கலந்துகொண்டனர்.

இலங்கையின் சார்பில் கடற்றொழில் இராஜாங்க அமைச்சர் திலிப் வெத ஆராச்சி, ஆரம்ப கைத்தொழில் சமூக வலுவூட்டல் இராஜாங்க அமைச்சர் அலிசாஹிர் மௌலானா, விவசாய நீர்பாசன மற்றும் கிராமிய பொருளாதார இராஜாங்க அமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி ஆகியோர் கலந்து கொண்டனர்.

Exit mobile version