Home செய்திகள் யுக்திய நடவடிக்கையை உடன் நிறுத்த வேண்டும் – ஐ.நா. நிபுணர் குழு வேண்டுகோள்

யுக்திய நடவடிக்கையை உடன் நிறுத்த வேண்டும் – ஐ.நா. நிபுணர் குழு வேண்டுகோள்

UNO e1686544681848 யுக்திய நடவடிக்கையை உடன் நிறுத்த வேண்டும் - ஐ.நா. நிபுணர் குழு வேண்டுகோள்‘யுக்திய’ நடவடிக்கையை இலங்கை அரசாங்கம் உடன் நிறுத்த வேண்டும் – இது குறித்து மீளாய்வு செய்ய வேண்டும் என்று ஐக்கிய நாடுகளின் நிபுணர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

போதைப்பொருளுக்கு எதிரான கடுமையான பாதுகாப்பை நடவடிக்கைகளை அணுகுமுறைகள் குறித்து ஐக்கிய நாடுகளின் நிபுணர்கள் அச்சம் வெளியிட்டுள்ளனர். அதிகாரிகள் உடனடியாக இந்த நடவடிக்கையை இடைநிறுத்தவேண்டும் மீளாய்வு செய்ய வேண்டும் என அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

சுகாதாரம் மற்றும் மனித உரிமைகளை அடிப்படையாக கொண்ட கொள்கைகள் குறித்து கவனம் செலுத்த வேண்டும். புறக்கணிக்கப்பட்ட சமூக, பொருளாதார குழுக்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான போதைப்பொருள் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டமையை கடுமையாக கண்டித்துள்ள ஐ.நாவின் மனித உரிமை நிபுணர்கள் கட்டாய இராணுவ புனர்வாழ்வு முகாம்களில் நூற்றுக்கணக்கானவர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளதையும் கண்டித்துள்ளனர்.

‘யுக்திய’ எனப்படும் நடவடிக்கையின் போது சித்ரவதை மற்றும் மனிதாபிமானமற்ற நடவடிக்கைகள் குறித்தும் அவர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

Exit mobile version