Tamil News
Home செய்திகள் யாழ். மாவட்ட இராணுத் தளபதி இடமாற்றம்; தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் அரசாங்கம் அதிரடி

யாழ். மாவட்ட இராணுத் தளபதி இடமாற்றம்; தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் அரசாங்கம் அதிரடி

யாழ். மாவட்ட இராணுவத் தளபதி மேஜர் ஜெனரல் ருவான் வணிகசூரிய திடீர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். தொண்டர் படையணியின் தளபதியாக அவர் நியமிக்கப்பட்டுள்ளார். இந்த இடமாற்றம் உடனடியாக நடைமுறைக்கு வரும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் மாவட்ட புதிய தளபதியாக தற்போதைய கிழக்கு மாகாணத் தளபதி மேஜர் ஜெனரல் சேனரத் பண்டார நியமிக்கப்படவுள்ளார்.

பொதுத் தேர்தல் இன்று நடைபெறவிருக்கும் நிலையில் அவசரமாக மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த இடமாற்றம் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.

Exit mobile version