Tamil News
Home செய்திகள் யாழ். மாவட்டத்தில் இன்றுவரை  160 பேருக்கு கொரோனா தொற்று -க.மகேசன்

யாழ். மாவட்டத்தில் இன்றுவரை  160 பேருக்கு கொரோனா தொற்று -க.மகேசன்

யாழில் ஆயிரத்து 305 குடும்பங்களைச் சேர்ந்த 3 ஆயிரத்து 736 பேர் தனிமைப்படுத்தலில் உள்ளனர் என யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன் தெரிவித்தார்.

யாழ். மாவட்ட கொரோனா நிலைமைகள் தொடர்பாக ஊடகங்களுக்கு  கருத்து தெரிவித்த அவர், “யாழ். மாவட்டத்தில் இன்றுவரை  160 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர்.

குறித்த தொற்றாளர்களுடன் நேரடியாக தொடர்புகளை பேணியதன் அடிப்படையில் யாழ். மாவட்டத்தில் ஆயிரத்து 305 குடும்பங்களைச் சேர்ந்த 3 ஆயிரத்து 736 பேர் தனிமைப்படுத்தலில் உள்ளனர்.

இதேநேரம், யாழில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வந்த 28 பேர் வீடு திரும்பியுள்ளனர்.

எனினும் யாழ் மாவட்ட மக்கள் சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி சுகாதார திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிவுறுத்தலுக்கு ஏற்ப செயற்படுவதன் மூலம் மேலும் தொற்று பரவலை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க முடியும்.

மேலும் யாழ். மாவட்டத்தில் மூடப்பட்டுள்ள சந்தைகளை திறப்பது தொடர்பாக எதிர்வரும் வாரம் இடம்பெறவுள்ள கொரோனா ஒழிப்பு தொடர்பில் ஆராயும் குழு கூட்டத்தில் ஆலோசிக்க உள்ளோம்”  என்றார்

Exit mobile version