Tamil News
Home செய்திகள் யாழ். மாநகரம் முடக்கப்பட்டு கிருமி நாசினி தெளிக்கும் நடவடிக்கை முன்னெடுப்பு

யாழ். மாநகரம் முடக்கப்பட்டு கிருமி நாசினி தெளிக்கும் நடவடிக்கை முன்னெடுப்பு

யாழ்ப்பாணத்தில் கொரோனா தொற்று அதிகரித்துள்ள நிலையில்,  நகரின் மத்திய பகுதியில் உள்ள வர்த்தக நிலையங்கள் அனைத்தும் மூடப்பட்டு கிருமி நாசினி  தெளிக்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

யாழ் மாவட்டத்தின் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை சடுதியாக அதிகரித்துள்ள நிலையில் நேற்றையதினம் மாவட்ட கொரோனா தடுப்பு செயலணியின் அவசர கூட்டம் இடம்பெற்றிருந்தது.

யாழ் மாவட்ட செயலாளர் கணபதிப்பிள்ளை மகேசன் தலைமையில் இடம்பெற்ற குறித்த கூட்டத்தின் போது பல தீர்மானங்கள் எடுக்கப்பட்டிருந்தன.

அதன் படி யாழ் நகர பகுதியில் அதிகளவான காவல்துறையினர், இராணுவத்தினர், சுகாதார துறையினர் மற்றும் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள்  இணைந்து கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்தினை நடைமுறைப்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், வட மாகாணத்தில் கொரோனாவின் அச்சுறுத்தல் அதிகரித்துள்ள நிலையில் பாடசாலைகளுக்கு முக்கிய அறிவிப்பு ஒன்று விடுக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய பாடசாலைகளில் காலை நேர பிரார்த்தனைகளுக்கு மாணவர்களை ஒருங்கிணைப்பதனை தவிர்க்குமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது.

Exit mobile version