யாழ் மக்கள் சுகாதார நடைமுறைகளை பின்பற்றுவதில்லை – பொலிஸ் மா அதிபர்

யாழில் சுகாதார நடைமுறையினை  பின்பற்றாத நிலைமை காணப்படுவதாக யாழ் மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் மகேஷ் சேனாரட்ன குற்றம்சுமத்தியுள்ளார்.

IMG 20201028 WA0020 யாழ் மக்கள் சுகாதார நடைமுறைகளை பின்பற்றுவதில்லை - பொலிஸ் மா அதிபர்

இந்நிலையில், மக்களுக்கு கொரோனா விழிப்புனர்வை ஏற்படுத்தும் வகையில்,யாழ்ப்பாண பொலிசாரின் ஏற்பாட்டில் இளைஞர் சேவை மன்றத்தினர் மற்றும் யாழ்ப்பாணம்   சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையினரின் பங்குபற்றுதலோடு  “மீட்டரான வாழ்க்கை”எனும் தொனிப்பொருளில் யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்தில் covid 19விழிப்புணர்வு ஸ்டிக்கர் ஒட்டும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டது.

IMG 20201028 WA0007 யாழ் மக்கள் சுகாதார நடைமுறைகளை பின்பற்றுவதில்லை - பொலிஸ் மா அதிபர்

அதே நேரம், வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்ட குடும்பங்களுக்குப் பொருட்களைப் பொதி மூலமாக விநியோகிக்க அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகர் பஷில் ராஜபக்ஷ தெரிவித்தார்.

பஷில் ராஜபக்ஷ ஆஜர் | Virakesari.lk

வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டுள்ள குடும்பங்களுக்கு இரண்டு வாரங்களுக்குப் பயன்படுத்தக் கூடிய வகையில் உலர் உணவுப் பொருட்களை பொதி மூலமாக வழங்குவது தொடர்பாகப் பொருளாதார மறுமலர்ச்சி மற்றும் வறுமை ஒழிப்பு தொடர்பான ஜனாதிபதி பணிக்குழு கவனம் செலுத்துகிறது.

கடன் தவணைகளுக்குச் சலுகை காலம் வழங்குவது தொடர்பாக நேற்றைய தினம் கலந்துரையாடல் இடம் பெற்றது. இதன்போது ஒரு வார காலம் முழுமையாக மூடப்பட்ட பகுதிகளுக்கு 5 ஆயிரம் வழங்கத் தீர்மானம் செய்யப்பட்டுள்ளது.