Home செய்திகள் யாழ்ப்பாணம் இந்திய துணை தூதரகம் நாளை முற்றுகையிடப்படும் – கடற்றொழிலாளா் முன்னெச்சரிக்கை

யாழ்ப்பாணம் இந்திய துணை தூதரகம் நாளை முற்றுகையிடப்படும் – கடற்றொழிலாளா் முன்னெச்சரிக்கை

0219 1 யாழ்ப்பாணம் இந்திய துணை தூதரகம் நாளை முற்றுகையிடப்படும் - கடற்றொழிலாளா் முன்னெச்சரிக்கையாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணைத் தூதரகத்தை நாளை செவ்வாயக் கிழமை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த யாழ். மாவட்ட கடற்றொழில் அமைப்புகள் எச்சரிக்கை விடுத்துள்ளன. நேற்று ஞாயிற்றுக்கிழமை மயிலிட்டி கடல் தொழிலாளர் கூட்டுறவு சங்கத்தினர் நடத்திய செய்தியாளர் சந்திப்பிலேயே அவர்கள் இதனை தெரிவித்தனர்.

இந்திய இழுவைப் படகுகளின் வரவு அதிகரித்துள்ளது. நேற்றுமுன் தினம் இரவும் இந்திய இழுவை படகுகளால் எமது மீனவர்களின் வலைகள் அறுக்கப்பட்டன. இது தொடர்ந்து சில நாட்களாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்தவிடயம் தொடர்பில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தெரிவித்த போதிலும் அதனை யாரும் செவிமடுப்பதில்லை.

இது தொடர்ந்து நடந்தால் யாரையும் நடமாட விடமாட்டோம். அரசாங்கம் எங்களை மோத விட்டு வேடிக்கை பார்க்கிறது. மேலும், இத்தியா தனது கடற்படையை எல்லையில் போட்டால் அவர்களின் ட்றோலர் இங்கு வராது. எனவே, இந்திய ட்றோலர்களை எல்லை தாண்டுவதை கண்டித்து யாழ்ப்பாணம் இந்திய துணை தூதரகம் செவ்வாய்க் கிழமை முற்பகல் 10 மணிக்கு முற்றுகையிடப்படும்” என்று அவா்கள் தெரிவித்தனா்.

Exit mobile version