கிரவல் கொண்டு செல்லப்படுவதை நிறுத்துங்கள் செட்டிகுளத்தில் வீதியை மறித்து ஆர்ப்பாட்டம்

வவுனியா செட்டிக்குளத்தில் நல்ல நிலையில் உள்ள வீதியால் மன்னாருக்கு கிரவல் கொண்டு செல்லப்படுவதை நிறுத்துமாறு கோரி இன்று வீதியை மறித்து மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

செட்டிகுளம் உலுக்குளம் வீதி 2014 ஆம் ஆண்டு புனரமைக்கப்பட்ட நிலையில் குறித்த வீதியின் ஊடாகவே மதவாச்சியில் இருந்து மன்னாருக்கான கிரவல் கொண்டு செல்லப்படுவதாகவும் செட்டிகுளத்தில் புதிதாக அனுமதி வழங்கப்பட்டுள்ள கிரவல் அகழ்வினால் அங்கிருந்து செல்லும் டிப்பர்களாலும் வீதி சேதமடைந்து வருவதாக தெரிவித்து அப்பகுதியில் மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.625.0.560.350.390.830.053.800.670.160.91 3 கிரவல் கொண்டு செல்லப்படுவதை நிறுத்துங்கள் செட்டிகுளத்தில் வீதியை மறித்து ஆர்ப்பாட்டம்

இதன் காரணமாக செட்டிகுளம் உலுக்குளம் வீதியில் வீதித்தடையை ஏற்படுத்தி கிரவல் கொண்டு சென்ற டிப்பர் வாகனங்களை வழி மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். இந் நிலையில் குறித்த இடத்திற்கு வருகை தந்த செட்டிகுளம் உதவி பொலிஸ் அத்தியட்சகர் தலைமையிலான பொலிஸார் விடயங்களை கேட்டறிந்து கொண்டு அதற்கான நடவடிக்கையை மேற்கொள்வதற்கு ஏற்ற வழிமுறைகள் தொடர்பில் கலந்துரையாடியிருந்தனர்.
kk கிரவல் கொண்டு செல்லப்படுவதை நிறுத்துங்கள் செட்டிகுளத்தில் வீதியை மறித்து ஆர்ப்பாட்டம்

இதன் போது குறித்த பகுதிக்கு வருகை தந்த செட்டிகுளம் பிரதேச செயலாளர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் கலந்துரையாடியதன் அடிப்படையில் செட்டிகுளத்தில் இருந்து வவுனியாவிற்கு செல்லும் மூன்று வீதிகளில் பூவரசங்குளம் ஊடாக செல்லும் வீதி மற்றும் வீரபுரம் ஊடாக செல்லும் வீதிகள் மிக மோசமாக சேதடைந்துள்ளமையினால் தற்போது உலுக்குளம் வீதி மாத்திரமே நல்ல நிலையில் பாவனையில் உள்ளதாகவும், செட்டிகுளம் வைத்தியசாலையில் இருந்து நோயாளர்காவு வண்டிகள் செல்லும் பிரதான வீதியாகவும் காணப்படுகின்றது எனவும் மக்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும் குறித்த வீதியால் கிரவல் கொண்டு செல்வதை தடுக்குமாறு ஆர்ப்பாட்டக்காரர்களினால் எடுத்துரைக்கப்பட்டது. இதனை செவிமடுத்த பிரதேச செயலாளர் இவ் வீதியினூடாக கிரவல் கொண்டு செல்லப்படுவதற்கான வீதி அனுமதியை தடை செய்யுமாறு வவுனியா அரசாங்க அதிபரூடாக அனுராதபுரம் அரசாங்க அதிபருக்கு எழுத்து மூலம் தெரியப்படுத்துவதாகவும் வீதி அபிவிருத்தி அதிகாரசபைக்கும் இவ் வீதியூடாக கிரவல் கொண்டு செல்வதற்கான அனுமதியை நிறுத்துமாறு எழுத்து மூலம் அறிவிப்பதாகவும் தெரிவித்திருந்தார்.

இந் நிலையில் செட்டிகுளம் உதவி பொலிஸ் அத்தியட்சகர் குறித்த வீதியில் அதி வேகமாக செல்லும் வாகனங்கள் மற்றும் வீதி ஒழுங்கை பின்பற்றாத வாகனங்கள் தொடர்பிலும் தாம் உடனடி நடவடிக்கை எடுப்பதாகவும் கிரவல் இன்றி வெற்று டிப்பர்கள் மாத்திரம் இவ்வீதியை பயன்படுத்த அனுமதிப்பதாகவும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுட்டவர்களுக்கு வழங்கிய உறுதிமொழியை அடுத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றிருந்தனர்.

எனினும் ஆர்ப்பாட்டத்தின் முடிவில் அங்கு பிரசன்னமாகிய இளைஞர்கள் சிலர் ஒரு மாதகாலமாக இவ்வாறு கிரவல் கொண்டு செல்லப்படுவதாகவும் எனினும் இன்று பிரதேசசபையின் உறுப்பினரான யூட் தலைமையில் ஆர்ப்பாட்டம் இடம்பெற்றுள்ளது. அது நல்ல விடயம். ஆனால் அது எதனையும் ஆராயாமல் செட்டிகுளம் பிரதேச செயலகமும் மக்களால் தெரிவு செய்யப்பட்டு பிரதேசசபைக்கு சென்ற பிரதிநிதிகளும் மக்கள் கருத்துகளையும் கேட்காமல் கிரவல் அகழ்வுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக தாம் பிரதேசசபை உறுப்பினராக உள்ள யூட்டிடம் கேட்டபோது தான் ஒரு மாதத்திற்கு முன்னதாக பிரேரணை முன்வைத்ததாகவும் எனினும் சபையால் நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனவும் தெரிவித்துள்ளதாகவும் தெரிவித்திருந்தனர்.

அத்துடன் ஏன் அவர்களுக்கு தமது ஆட்சியில் உள்ள சபையால் தவிசாளரை பயன்படுத்தி இதனை தடுத்திருக்க முடியவில்லை என கேள்வி எழுப்பியிருந்ததுடன் ஊடகங்களுக்கும் கருத்து தெரிவித்தனர்.

இதற்கு பதிலளித்த பிரதேச சபையின் உறுப்பினர் யூட்,

தான் ஒரு மாத்திற்கு முன்னர் கொண்டு வந்த பிரேரனை தொடர்பில் தனக்கு எழுத்து மூலமாக எவ்வித பதிலும் வழங்கப்படவில்லை என தெரிவித்திருந்ததுடன் தவிசாளர் எவ்வித நடவடிக்கையும் இது தொடர்பில் எடுக்காமையே காரணம் எனவும் தெரிவித்தார்.