Tamil News
Home செய்திகள் யாழ்ப்பாணத்தில் முஸ்லிம்கள் குடியமர்த்தப்படவுள்ளனர்-தமிழ் மக்களின் குடிப்பரம்பலை சிதைக்கும் முயற்சி

யாழ்ப்பாணத்தில் முஸ்லிம்கள் குடியமர்த்தப்படவுள்ளனர்-தமிழ் மக்களின் குடிப்பரம்பலை சிதைக்கும் முயற்சி

காணிகளற்ற நிலையிலுள்ள முஸ்லிம்களை யாழ்ப்பாணத்தில் குடியமர்த்துவதற்கான வீட்டுத் திட்டங்களை யாழ்ப்பாணத்தில் நிர்மாணிப்பதற்கு அங்கீகாரம் வழங்கப்பட்டது.

16.08 அன்று யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் இந்த நடவடிக்கையை மேற்கொள்ளுமாறு சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அறிவுறுத்தியுள்ளார்.

சில முஸ்லிம் வர்த்தகர்கள் 7.5 ஏக்கர் காணியை வழங்கியுள்ளனர். அவர்களுக்கான வீடமைப்புத் திட்டங்களை வழங்குவது தொடர்பாக கவனம் செலுத்த முடியும் என பிரதமர் தெரிவித்தார்.

தெற்கிலிருந்து பெருமளவு மக்கள் யாழ்ப்பாணத்திற்கு வருகை தருகின்றனர். அதுபோல யாழ்ப்பாண மக்களும் தென்பகுதிக்கு செல்கின்றனர். யாழில் குடிநீர் பிரச்சினை, காணிகளை விடுவித்தல் போன்றன பிரதான பிரச்சினைகளாக உள்ளன.

மேல் மாகாணம் நவீனமயப்படுத்தப்பட்டு பெருநகரமாக மாற்றப்படுவது போல, யாழ்ப்பாணமும் அபிவிருத்தி செய்யப்படவுள்ளது. மக்கள் தொகைக்கு ஏற்றவாறு வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கப்படவுள்ளது. யாழ்ப்பாணத்தில் மட்டுமல்லாது நாட்டின் எல்லா பகுதிகளிலும் ஜனநாயகத்தை உறுதிப்படுத்த பல்வேறு வேலைத் திட்டங்கள் மேற்கொள்ளப்படவுள்ளன. அடுத்து வரும் 5 முதல் 10 ஆண்டுகளுக்கான புதிய பொருளாதார நிலையை உருவாக்க முடியும் என்ற நம்பிக்கை உள்ளது என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மேலும் கூறினார்.

இதனிடையே தமிழ் மக்களின் காணிகளை மீள வழங்கி அவர்களை தமது சொந்த இடங்களில் குடியமர்த்துவதை திட்டமிட்டு தடுத்துவரும் ரணில் விக்கிரமசிங்காவின் அரசு தமிழர் தாயகப் பிரதேசத்தில் தமிழ் மக்களின் குடிப்பரம்பலை சிதைக்கும் முயற்சிகளில் ஈடுபட்டு வருவது இங்கு குறிப்பிடத்தக்கது.

Exit mobile version