யாழ்ப்பாணத்தில் கறுவா உற்பத்தி

யாழ் மல்லாகம் ஐயனார் கோவிலடியில் வசிக்கும் அருணாசலம் விஜயகிருஷ்ணன் என்பவர் தனது வீட்டுத் தோட்டத்தில் 2012 இல் கறுவா மரங்களை நாட்டி தற்போது அறுவடை செய்திருக்கின்றார்.

cinoman2 யாழ்ப்பாணத்தில் கறுவா உற்பத்தி

ஓரளவு நிழலான பகுதியில் அதிகம் நீர் தேவைப்படாத பணப்பயிராக இது விளைகின்றதாக அவர் கூறுகின்றார். தென்னிலங்கையில் விளைகின்ற கறுவாப்பட்டைகளை விட யாழில் விளைந்த கறுவா அதிக காரம் ,உறைப்பு ,இனிப்பு கொண்டதாக இருப்பதாகவும் மேலும் அவர் குறிப்பிடுகின்றார்.

cinoman யாழ்ப்பாணத்தில் கறுவா உற்பத்தி

யாழ்ப்பாணம் உள்ளிட்ட ஏனைய பிரதேசங்களிலும் இவ் உற்பத்தியை சிறப்பாக மேற்கொள்ளலாம் என்பதை விஜயகிருஷ்ணன் அவர்கள் நிருபித்துள்ளார். பலரும் அவரது முயற்சிக்கு பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.